பக்கம்:தாயுமானவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அருளிச் செயல்களின் போக்கு தி யுமான அடிகள் அருளிச் செய்த திருப்பாடல்கள் 1452. இவை பல்வேறு வகை அமைப்பில் பலபல தலைப்பு களுடன் காணப்படுகின்றன. பெரும்பான்மையான தலைப்பு கள் முடிபினை வைத்தும் தொடக்கத்தை வைத்தும் பெயர் பெற்றுள்ளன. பரிபூரணானந்தம், மெளனகுரு வணக்கம், கருணாகரக் கடவுள், சித்தர் கணம் ஆனந்தமானபரம், சுக வாரி, எங்கும் நிறைகின்ற பொருள், சச்சிதானந்த சிவம், தேசோ மயானந்தம், சிற்சுகோத விலாசம், பராபரக் கண்ணி, பைங்கிளிக் கண்ணி, எந்நாட்கண்ணி, காண்பேனோவென் கண்ணி, ஆகாதோவென் கண்ணி, இல்லையோவென் கண்ணி, வேண்டாவோவென் கண்ணி, நல்லறிவேயென் கண்ணி, மலைவரை காதலி, அகிலாண்டநாயகி, பெரிய நாயகி இவையாவும் முடியினை வைத்துப் பெயர் பெற்றவை. இவற்றுள் 'பராபரம் என்பது பரம், அபரம் என்ற இரு சொற்களாலாய சொற்றொடர். மேலானதும் கீழானதுமாய எவற்றினும் கலந்துள்ள முதல்வனை அடிகளார் பராபரம் என்றார். ஏனையவற்றின் பொருள் வெளிப்படை. அடுத்து, ஆகார புவனம், தேன் முகம், பன்மாலை, நினைவொன்று, பொன்னை மாதரை, ஆரணம், சொல்லற்க ரிய, வம்பனேன், சிவன் செயல், தன்னையொருவர், ஆசை யெனும், எனக்கெண்செயல், மண்டலத்தின், பாயப்புலி, உடல் பொய்யுறவு, ஏசற்ற நிலை, காடும் கரையும், எடுத்த தேகம், முகமெலாம், திடமுறவே, தன்னை ஆக்குவை, கற். புறு சிந்தை, தந்தை தாய், பெற்றவட்கே, கல்லாலின், நின்ற நிலை, பாடுகின்ற பனுவல் - இவையாவும் தொடக்கத்தை வைத்துப் பெயர் பெற்றுள்ளன. இவற்றுள் ஆகாரபுவனம் என்பது, இறைவனுருவாய் புவனம் என்ற பொருள் படும். ஆகாரம் - வடிவம்; ஏனையவற்றின் பொருள் வெளிப்படை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/48&oldid=892334" இலிருந்து மீள்விக்கப்பட்டது