பக்கம்:தாயுமானவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களின் போக்கு శః 29 , அடிகள் காலத்தே வடமொழிப் பயிற்சி மிக்கிருந்ததென் பது, அவரது பாடல்களில் வழங்கிவரும் வடசொற்களின் மிகுதிப்பாட்டால் இனிது புலனாகும். அடிகள் வடமொழியில் உபநிடதங்களையே நன்கு பயின்றனர் என்பது தெளிவு. தார்க்கீகர் கூறும் முறையில் சுத்தாத்துவிதம்' என்பதற்குப் பொருள் கொள்ளாது நேராக அதனைத் தமிழிலே மொழி பெயர்த்துப் புனித மெனும் அத்துவிதம்' என்பர். அடிகளின் பாடல்களில் வடமொழிகள் மிகப் பயின்றுவரினும், அவை செந்தமிழ்ச் சுவையில் சிறிதும் குறைவு பட்டில என்பதைக் காணலாம். எ-டு: "மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூல மரபில்வரு மெளனகுருவே! கருதரிய சிற்சனபயில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே! வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே! அண்டபகி ரண்டமும் அடங்கஒரு நிறைவாகி ஆனந்த மானபரமே!” என்பன காண்க. மேலும், 'கண்டன எலாம்மோன உருவளிெய தாகவும் கருதிஅஞ் சலிசெய்குவாம் பேர்அனந் தம்பேசி மறைஅனந் தம்சொலும் பெரியமவு னத்தின்வைப்பைப் பேசரும் அனந்தபத ஞானஅ னந்தமாம் பெரியபொரு ளைப்பணிகுவாம் 1. கடவுளும், உலகமும் பொருள் தன்மையினால் வேதாயினும் கலப்பால் வேற் துமை தோன்றவாறு கடவுள் உலகத்தோடு கலந்திருக்கும் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/49&oldid=892335" இலிருந்து மீள்விக்கப்பட்டது