பக்கம்:தாயுமானவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 42 & தாயுமானவர் இன்பத் தமிழின் எளிமையை அதன் எல்லையைக் கண்டவர் போல், இனிமையாக எளிய சொற்களில் ஆழ்ந்த கருத்து களை வடித்துக் காட்டும் அழகு சொல்லுந்தரமன்று. பைங்கி ளிக் கண்ணி, எந்நாட் கண்ணி போன்றவைகள் யாவும் இந்த எளிமைப் போக்கில் அமைந்தவை. 'அருளால் எவையும் பார்என்றான் - அத்தை அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்; இருளான பொருள்கண்ட தல்லால் - கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி? தோழி' என்பது ஆனந்தக் களிப்பு. ஆழ்ந்த கருத்தினை ஆனந்தப்ப டுத்திக் காட்டுவது அற்புதம், அற்புதம். 'நலமேதும் அறியாத என்னைச் - சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம்தந் தேசஞ் சலமேதும் இல்லாமல் எல்லாம் - வல்லான் தாளால்என் தலைமீது தாக்கினான் தோழி' இறைவன் தனக்கு திருவடி தீட்சை செய்து வைத்ததை இதில் காட்டி மகிழ்கின்றார். 'வண்னம்’ என்ற தலைப்பில் உள் ளவை 'திருப்புகழ் பாங்கில் அமைந்துள்ளன. கற்றுணர்ந்து அடங்கிய சான்றோராதலால், கல்விச் செருக்கின் வெறி தனிந்த நிலையில் இவர் கூறும் கருத்துகள் கங்கையாறு அடித்துச் செல்வது போலன்றி யமுனையின் வெள்ளம் போல் அமைதியான பாங்கில் படிப்போர் மனத்தில் ஆழப் பதிகின்றன. எ-டு: 'கல்லாத பேர்களே நல்லவர்கள்! நல்லவர்கள் கற்றும்அறி வில்லாதஎன் கன்மத்தை என்சொல்வேன்? மதியை என்சொல்லுகேன்? கைவல்ய ஞானநீதி 27. ஆனந்தக் களிப்பு - 13 28. மேலது - 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/62&oldid=892350" இலிருந்து மீள்விக்கப்பட்டது