பக்கம்:தாயுமானவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இறைவனின் திருக்குணங்கள் தியுேமான அடிகளின் பாடல்களைப் படித்து அநுப விக்கும்போது அவற்றில் எங்கும் சைவசித்தாந்தக் கருத்துகள் சிதறிக் கிடப்பதைக் காணலாம். சைவ சித்தாந்தம் முடிந்த முடிபாகக் கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை பதி, பசு, பாசம் என்று வழங்கப்பெறும். பதி என்பது இறைவன்; கடவுள். பசு என்பது ஆன்மா; உயிர் 'சீவான்மா' எனப்படு வதும் இதுவே. பாசம் என்பது தளை, அஃதாவது உயிரைப் பிணித்துள்ள கட்டு. இந்த மூன்றும் தனித்தனிப் பொருள்களா கும். இந்த மூன்றிற்கும் எந்நாளிலும் தோற்றமும் இல்லாத முடிவும் இல்லை. தோற்றமும் முடிவு அற்ற பொருள் அநாதி' யாகும். அஃதாவது 'ஆதி இல்லை. ஆதி இல்லையாதலின் அந்தமும் இல்லை. இதனை, பதிபசு பாசம் எனப்பகர் மூன்றின் பதியினைப் போற்பசு பாசம் அநாதி' என்று தெளிவுபடுத்துவர் திருமூலர். எனவே, ‘பதியாகிய கடவுள் என்று உண்டோ அன்றே பசுவாகிய உயிரும் உண்டு; அன்றே அவ்வுயிர்களைப் பிணித்துள்ள பாசமும் உண்டு' என்பது சைவ சிந்தாந்தத்தின் முடிந்த முடிபாகும். ஈண்டு, பதி எனப்படும் இறைவன் இயல்புகளைப் பற்றி தாயுமான அடிகள் குறிப்பிடும் கருத்துகளை ஆராய்வோம். புராணங்களில் கூறப்பெறும் கடவுளின் அருட்செயல்களை அடிகள் அதிகமாகக் கூறாமல், அவரது பொதுவாகிய பெருந் தன்மைகளை அதிகமாக எடுத்து விளக்குவதைக் காணலாம். இப்போக்கில் இவர் இணையற்றவராகத் திகழ்கின்றார். உயிர் ஐம்பொறிகட்கும் மனத்திற்கும் புலனாகின்ற உல கத்தையே அறியும். காணப்படும் உலகமெல்லாம் சடமாகிய 1. திருமக். முதல் தந். உபதேசம் - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/64&oldid=892352" இலிருந்து மீள்விக்கப்பட்டது