பக்கம்:தாய்மை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் தத்துவம் தருக்கம் 101

எல்லாச் சமயங்களும் ஒன்றிய நில்ையில் இயங்கின. ‘நன்றே செய்வாய் பிழை செய்வாய் நான்ோ இத்ற்கு நாயகமே என்றார் மணிவாசகரும் எதுவரினும் வருக அலது எது போயினும் போக, நின் இணையடிகள் மறவாத வேறொன்று மாத்திரம் எனக்கடைதல் வேண்டும் அரசே!! என்று இராமலிங்கர் இக்கருத்தினைத்தான் வற்புறுத்தி னார், அழுதால்,உன்னைப் பெறலாமே! என்ற படி.அழுது வேண்டி நலம் பெற்றவர் சிலர்; தொழுது வேண்டி நலம் பெற்றவர் சிலர். தொண்டருக்குத் தோண்டராகத் தொண்டு செய்து நலமுற்றவர் பலர். உளம் உருகிப் பாடிப் பரவிப் பயன் பெற்றவர் பலர். அவர்கள் கொள்கை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. நமக்கு. மேல் ஒருவன் இருகிறான். அவன் வேண்ட முழுதும் தருவான்’ என்ற நம்பிக்கையிலேயே வாழ்ந்தவர். அவர்தம் பாடல் களில் கனிவு உண்டு; தெளிவு உண்டு. நாமர்க்கும் குடியல்லோம் என்ற துணிவு உண்டு. அவர்கள் எதையும் இறையருள் எனக் கொண்டே வாழ்ந்தனர். அல்லல் உற்றாலும் அவன் கொடையே என் எண்ணி வாழ்ந்தவர். அவர்களெல்லாரும் கொள்கையைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. கடவுளை நம்பி வாழ்ந்தனர். இது எல்லாச் சமயங்களுக்கும் ஏற்ற உண்மையாகும்.

ஆனாலும் சமயங்கள் வளர வளரத் தத்தமக்கு ஏற்ற வகையில் பல கொள்கைகளை வகுத்துக் கொண்டனர். அவற்றையே சமய தத்துவங்கள் எனக் கொண்டனர். அவைகள் அனைத்தும் இச்சமய உண்மைகளின் அடிப்படை யிலே அமைந்தன வாயினும் சில வகைகளில் வேறு பட்டு, வெவ்வேறு மார்க்கங்களாயின. அவற்றையே தத்துவம் என்றனர். எல்லாத் தத்துவங்களும் முடிவில் ஆறு களெல்லாம் ஒரே கடலில் சென்று, கலப்பன போன்று நம்பிக்கை என்ற சமய உணர்விலேயே ஒன்றிக் கலப்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/103&oldid=684490" இலிருந்து மீள்விக்கப்பட்டது