பக்கம்:தாய்மை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - தாய்மை

துரியோதனன் அவையில் துச்சாதானன் துகில் உரியும் போது, திரெளபதி இருகைகளாலும் சேலையை இறுகப் பிடித்துக்கொண்டு கண்ணா என்று கதறினாள். கண்ணன் உன் கைகளையும் நம்பி என்னையும் ஏன் அழைக்கிறாய்” என்று கூறி வாளாயிருந்தான். சேலை வளரவில்லை. பின் ஒரு கையால் சேலையை இறுகப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையினைத் தூக்கிக் கண்ணா” என்றாள். அப்போதும் அதே நிலைதான். ஆனால் முற்றும் நம்பி, தன்னை மறந்து, சேலையை விடுத்து, இரு கைகளையும் உயரத்துக்கி கண்ணா” என்ற உடனே சேலை வளர்த்தது: அவள் வாழ்வு நிலைத்தது. ஆம்! நம்பிக்கை நூற்றுக்கு நூறு-முற்றும் பொருந்தியதாக அமையவேண்டும். அந்த நம்பிக்கை இன்று மக்களிடம் குறையவேதான் சமயத்தால் நாட்டிலும் உலகிலும் பல குழப்பங்கள் நிகழ் கின்றன. அக்குழப்பம் நீங்கி, முழுநம்பிக்கை நாட்டில் மலர்வதாக!

எல்லாச் சமயங்களிலும் கடவுளை தேரில் கண்டவர் இலர். புராணங்களிலும் பிற சமய இலக்கியங்களிலும் இறைவன் நேரில் வந்தார்-கண்டார் என்று கூறுவது மரபு பற்றியே எனக் .ெ கா ள் ள வேண்டும். கண்டவர் விண்டிலர்-விண்டவர் கண்டிலர்’ என்ற மொழி இதுபற்றி எழுந்ததேயாகும். ஆயினும் காண ா த ஒன் ைறசக்தியாக - சிவனாக - திருமாலாக - பரமபிதாவாகஅல்லாவாக - பிறவாகக் கொண்டு வழிபடுவதெல்லர்ம் நம்பிக்கை அடிப்படையில் அமைந்தனவேயாம். எனவே சமயம் நம்பிக்கை அடிப்படையில் பழங்காலந்தொட்டு வளர்ந்து வரும் தெய்வ நெறியாகும்.

இச் சமயக் கொள்கைகளைப் பற்றி முந்தையோர் கவலைப் படவில்லை. நமக்கு மேலுள்ள சக்தி ஒன்று உண்டு; அது நமக்கு வேண்டுவனவெல்லாம் தரும் என நம்பினார்கள். நல்லதும் அல்லதும் அவன் செயலே என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/102&oldid=684489" இலிருந்து மீள்விக்கப்பட்டது