பக்கம்:தாய்மை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் தத்துவம் தர்க்கம் 99

ஆண்ட சைண சமயத்தைச் சார்ந்த மகேந்திரப் பல்லவன் அன்று காஞ்சியில் வாழ்ந்த சைவ சமயப் பிரிவினர்ைச் சாடும் மத்த விலாசப் பிரகசனம்’ என்னும் துர்ல் வரலாற்றில் கரும்புள்ளியாக உள்ளதன்றோ! பின் அவனே சைவனாயினான் என்பது வரலாறு. அதே காஞ்சியில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வைணவ வடகலை தென் கலையாளர்கள் வழக்கிட்டு இலண்டன் உயர்நீதி மன்றம் (Prevy Council) வரை சென்று வாதாடியதும் உண்டே. அப்படியே கிறித்தவத்திலே உள்ள பிரிவுகளில்தான் எத்தனை மாறுபாடு; மகமதியத்திலும் எத்தனை வேறுபாடு. அவர்களுக்குள்ளே எத்தனை, போர்கள். ஒன்றி வாழ வழிகாட்ட வேண்டிய சமயத்தைப் பின்பற்று கிறவர் இவ்வாறு மாறுபட்டு மனித வாழ்வை அல்லல் படுத்துவது என்று நிற்குமோ அன்றுதான் நாடும் நானிலமும் சிறக்கும். -

எங்கோ சென்று விட்டேன். சமயம் அன்பில் திளைப்பது; நம்பிக்கையில் விளைவது என்பதை மீண்டும் தொடுவோம். நம்பினார் கெடுவதில்லை நாலு மறை .திர்ப்பு, அம்பிகையைச் சரணடைத்தால் அனைத்து வரம் பெறலாம்’ என்பார் பாரதியார். இதில் நாலு மறை என்பது நான்கு வேதங்களை அன்று. நான்கு, என்பது பலரைக் குறிப்பது! யாவராயினும் நால்வரைப் பின்னிடில் தேவர் என்பது தேறும் இவ்வையகம்’ என்ற சிந்தாமணியும் * நாலு பேர் போற்ற வாழ்’ என்ற உலக வழக்கும் இதை வலியுறுத்தும். எல்லாச் சமயங்களும் சமய நூல்களும் நம்பினால் கெடுவதில்லை என்ற உண்மையினையே

வற்புறுத்துகின்றன.

நம்பிக்கை ஓரளவில் மட்டும் இருந்தால் போதாது. நூற்றுக்கு நூறு அமைய வேண்டும். தன்னை ஒறுத்துச் மு.சிலுவைதாங்கி என்னொடுவா’ என்ற இயேசுகூற்றும் பார தத்தில் துரோபதையின் செயலும் இதை வலியுறுத்துவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/101&oldid=684488" இலிருந்து மீள்விக்கப்பட்டது