பக்கம்:தாய்மை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயங்கள் சமரச உணர்வை ஊட்டுகின்றன என்பதை இலக்கிய வாயிலாக நாம் அறிகிறோம்.

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி

ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் ‘ . என்ற சித்தாந்தப் பாடலும்,

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற மணிவாசகர் அடிகளும் இதற்குச் சான்றாகும். சைவனாகிய நான் சிவன் என்று கொள்கிறேன். ஆயினும் எந்நாட்டவரும் எச்சமயத்தோரும் வணங்கும் இறைவனும் அவனே என்ற சமரச உணர்வையே இவை வலியுறுத்துகின்றன. ஆயினும் இடைக்கால வரலாற்றில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற சண்டைகளும் (Wars of crusades) நம் நாட்டு வரலாற்றில் சமண பெளத்த சைவ வைணவச் சண்டைகளும் சமயம்’ என்ற பெயருக்கே இழுக்கை உண்டாக்கிவிட்டன,

வேறொரு சமயம் செய்தே எரிவினால்

சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் “ என்று சாக்கியரையும் அறுபத்து மூன்று நாயனாருள் ஒருவராகக் கொண்ட உயர் சமயக் கொள்கை நாட்டிலும் உலகிலும் பரவினால் உலகம் வேறுபாடகற்றி.நலமுற்ற நல்ல உலகமாகத் திகழாதா?

மற்றும் ஒவ்வொரு சமயத்திலும் பல உட்பிரிவுகள் உள்ளமை அறிவோம். அடிப்படை ஒன்றாயினும் வழிபாட்டு முேறை - குறியீடு இவைகளின் காரணத்தால் ஒரே சமயம் 1b) கிளைகளாகப் பிரிந்து தம்முள் மாறுபட்டுச் சண்டையிட்டு, போர் விளைத்து, நீதி மன்றங்களில். வழக் டிகாடி வாழ்வைப் பாழாக்குகின்ற அவல நிலை உலகில் காணும் நிலை அல்லவா! ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/100&oldid=684487" இலிருந்து மீள்விக்கப்பட்டது