பக்கம்:தாய்மை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் தத்துவம் தர்க்கம் 9”

சசன் கோயில்’, என்றும் நீங்கள் உங்கள் அண்டை வீட்டுக் காரனை உங்களைப் போலவே நேசித்து அன்பு காட்டுவீர். களானால் இறைவனும் உங்களிடம் அன்பு காட்டுவான்’ என்றும் சமயத் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். அதன் வழியே சமயம் சமுதாயத்தொடு வேறுபட்டது அன்று’ என்றும் உலகம் ஒன்றி வேறுபாடற்று வாழச் சமயமே. அடிப்படை என்றும் மக்கள் உணரத் தொடங்கினர். ஆயினும் நாளாக ஆகச் சமயக் காழ்ப்பும் வேறு பாட்டு: உணர்ச்சியும் அப்படியே மக்கள் வாழ்வில் புகுந்தன. சமய கோடிகளெல்லாம் தன் தெய்வம் என் தெய்வம் என்று. எங்கும் வழக்கிடவும் நின்றது எது?’ என்று தாயுமானவர் காட்டி, சமய ஒருமைப் பாட்டை வலியுறுத்தி அந்தப் பாடலை முடிக்கிறார். சில அடிப்படை உண்மைகளை மறந்ததனாலேயே ஒன்றி வாழவேண்டிய சமய நெறி, வேறுபட்டு நாடுகளையே துண்டிக்கும் அளவிற்கு அவல. திலையில் செல்ல மனிதனைத் தூண்டிற்று.

பல பெரியவர்கள் அவ்வப்போது தோன்றி, இந்த, வேறுபாட்டு உணர்வை மாய்க்க எடுத்த முயற்சிகளெல்லம். விழலுக்கு இறைந்த நீராகிக் கழிந்தன. ஆத்திசூடி பாட வந்த பாரதியார், - -

  • ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் பேசும் இறைவன் என்று எல்லாத் தெய்வங்களையும் ஒன்றெனக் காட்டி, நாட்டைத் திருத்த முயன்றார். நல்ல வேளை நாடு சமயத்தால் துண்டாடப்பட்டபொழுது அவர் அதைக் காணாது மறைந்துவிட்டார். .

சில சமயங்கள் தம் அடிப்படைக் கொள்கைக்கு மாறாகக் காழ்ப்புணர்ச்சியை வளர்க்கும்போது, சிவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/99&oldid=684920" இலிருந்து மீள்விக்கப்பட்டது