பக்கம்:தாய்மை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் தத்துவம் தருக்கம் 103

திலையில் இவை உள்ளன. இக் கருத்துக்களெல்லாம் முன் சொன்ன சமயப் பாடல்களாகியதோத்திரங்களில் உள்ளன வேனும், பின் அவற்றை விளக்கி, கொள்கையாக்கித் தத்துவமாக்கிச் சாத்திரங்கள் எனப் பெயரிட்டனர் இவ்வாறே வைணவத்திலும், வேதாந்த வெறியிலும் பல தத்துவங்கள் வடமொழி நூல்களாக உள்ளன. பெளத்த சமணக் கொள்கைப் பிரிவுகளும் இவ்வாறே சாத்திர நூல் களாக்கப் பெற்றன. கு ரா னும் விவிலிய நூலும் வழிபாடு பற்றிக் கூறுவதோடு கொள்கை நெறி பரப்பும் மையங்களாகவும் உள்ளன. சிறுசிறு தத்துவ நெறி மாறு பாட்டுக் கருத்துக்களால் அவற்றுள்ளம் சில பிரிவுகள் உள்ளன. எனவே சமய நூல்களாகிய தோத்திரங்களும் தத்துவ நூல்களாகிய சர்த்திரங்களும் இர ண் டு ம் சமயத்தைத் தாங்குவனாக உள்ளன. தோத்திர நூல்கள் இல்லாத நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்த கிறித்த நெறி பரப்பிய பாதிரியர் இந்த நாட்டு நிலைக்கேற்ப தமிழில் பல தோத்திரப் பாக்களை இயற்றி நாடுதோறும் வழிபாட்டில் பாடி மகிழ்கின்றனர். அப்படியே இஸ்லாமி வரும். இந்தச் சாத்திரங்கள் தொடக்கத்தில் சிறுசிறு கொள்கைகளுக்காக வே று ப ட் ட போதிலும், & fT@ வெள்ளத்தில் அவையே பெரும் போர்களையும் வழக்கு களையும் வகுக்க வழிகோலின. இவை ஒரு சமயந்ெறிக்கு உட்பட்டன. ஆனால் அடுத்து நாம் காண இருக்கும் தருக் கமோ ஒரே சமயவாதங்களன்றிச் சமயத்துக்குச் சமயம் மாறுபட்டு, வேறுபட்டுச் சண்டை இடும் அளவுக்கு வளர்ந்து விட்டது. ஆயினும் இந்தத் தத்துவங்களும் தருக்கங்களும் எங்கோ தம்மைக் கற்றவர் எனக் கருதிக் கொள்ளும் ஒரு சிலரிடையேதான் உள்ளன. என்றாலும் சமயமும் அதன் வழியே தோன்றிய தோத்திரங்களும் கற்றார் கல்லார் என்ற வேறுபாடு இன்றி எல்லா மக்களாலும் எல்லா நாட்டவராலும் போற்றி வளர்க்கப்படுவதையே வரலாறு காட்டுகிறது. - - . . . . . . . . . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/105&oldid=684492" இலிருந்து மீள்விக்கப்பட்டது