பக்கம்:தாய்மை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாய்ன்ம

தருக்கம் (Logic) என்ற சொல்லுக்கே வாதமிடுதல் என்பது பொருளாகும். ‘தன் தெய்வம் என் தெய்வம் என்று. எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது” என்று தாயுமானவர் கூறியபடி, வீண் வாதத்திலும் சண்டையிலும் சமயங்களும் தத்துவங்களும் மறைக்கப் பெறுகின்றன. தமிழ்நாட்டில் சங்க காலத்திலே சில சமயங் களும் உட்பிரிவுகளும் இருந்தனவேனும் அவை தம்முள் மாறுபட்டதில்லை; தருக்கம் செய்ததில்லை: அதனால் வேறுபட்டதும் இல்லை. ஆயினும் கடைச்சங்க காலத்தை ஒட்டி எழுந்த மணிமேகலையிலேதான் தமிழில் முதல் முதல் சமய வாதமாகிய தருக்கம் தலை காட்டுகின்றது. ன்ன் சமயம் இதனால் உயர்ந்தது என்று கூறின், இல்லை இல்லை இதனால் என் சமயம் உயர்ந்தது’ என்று வாதமிட்டு வழக்காடும் நிலை அங்கே தோன்றிற்று. இரு பெருங் காப்பியங்களென்று இணைக்கப்பட்டாலும் இந்த வகையில் சிலம்பும் மேகலையும் மாறுபடுகின்றன. சமணத்துறவியாகிய இளங்கோ பிற தெய்வங்களாகிய காளி, திருமால், முருகன் ஆகியோரை போற்றிப் பாட, சாத்தனாரோ தம் நூலில் சமயக்கணக்கர் தம் திறம் கெட்டகாதை என்ற ஒரு பகுதியினையே அமைத்துக் கொண்டு, பிற சமயக் கோட்பாடுகளையெல்லாம் ஒதுக்கி, தம் சமயமே உயர்ந்தது என வாதிட்டு முடிப்பர். அவரே. எழுதிய நூலாதலாலே அங்கே மறுப்பவர் இலர். எனவே தருக்கம் பிற நாடுகளில் - பிற சமய நெறிகளில், வெவ்வேறு வகையில் வெவ்வேறு கால எல்லைகளில், தோன்றி வளர்ந்தது என்றாலும் தமிழ்நாட்டினில் இந்த மாறுப்ாட்டுக் கொள்கையினை வளர்த்தவர் இரண்டாம் நூற்ற்ாண்டில் வாழ்ந்த சாத்தனாரே எனக் கொள்ளலாம். ஆந்தித் தருக்கம் இன்று பல வகையில் விரிந்து சமுதாயத் இல்ேயே வெறும் வாதமாக இல்லாது நச்சு நோயாக நலிவு ச்ெய்யும் வ்கையில் அமைந்துள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/106&oldid=684493" இலிருந்து மீள்விக்கப்பட்டது