பக்கம்:தாய்மை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் தத்துவம் தருக்கம் I 95

ஒரே சமயத்திலேயே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தர்க்கம் எல்லை மீறிப் போவதுண்டு. அண்மையில் வாழ்ந்த மறைமலை அடிகள், குளை இரத்தின சபாபதி நாயகர் ஆகியோர் வாதங்களை ஒரு.சான்றாதிச் சுட்டலாம். நல்லவேளை அவை - அவை பற்றிய இதழ்கள்-நூல்கள் நாட்டில் வழக் கொழிந்தன.

இவ்வாறு மக்கட் சமுதாய நலத்துக்கென எழுந்த சமய நெறி, தன் தத்துவத்தால், தருக்கத்தால் பொலிவு இழந்து, மாறுபாடுற்று கலாம் விளைத்து மனித சமுதாயத்தையே அரிப்பதைக் காண்கிறோம். எனவே தான் நான் மேலே காட்டியபடி இராமலிங்க அடிக்ளாரும் பாரதியும் சமய ஒற்றுமைக்கு - சமரசத்துக்குப் பாடுபட்டுப் பாட்டிசைத்துள்ளனர். எனினும் தருக்க வாதத்தை அறிந்தோ அறியாமலோ மனித உள்ளத்தில் சமய வெறி தாண்டவமாடத் தொடங்கிவிட்டது. அறிவுடைய மனிதன் நின்று நெடிது நினைப்பானாயின் சமயங்கள் அனைத்தும் ஒரே கட்வுளைக் குறிப்பன என்பதை உணர்ந்து, பல சமயங் க்ளாயினும் அனைத்தும் ஒன்றே என அறிந்து, பெகிய புராணம் காட்டுவது போன்று சாதி வேறுபாடும் சமயக் காழ்ப்பும் அற்று, ஒன்றிய சமுதாய வாழ்விலே வாழத் தொடங்குவான். அந்த நாள் என்று மலர்கின்றதோ அன்றே உலகம் அமைதியுறும்; அன்பு விளங்கும்; அருள் கொழிக்கும்! அந்த நன்னாள் விரைந்து வருவதற்கு இந்த வாஷிங்டன் பெருநகரத்தில் பணியாற்றும் ஒன்றிய சமய நேறி போற்றும் கழகம் வழிகாட்டியாக அமைவதாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/107&oldid=684494" இலிருந்து மீள்விக்கப்பட்டது