பக்கம்:தாய்மை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இலக்கியம்

8. பழந்தமிழ்க் கவிதைகளின்

வளர்ச்சி x

பகுதி !

தொன்மை

உயிர்த் தோற்ற வளர்ச்சியின் உச்ச நிலையில் மனிதன் வாழ்கின்றான். இந்த மனித நிலை பெறுமுன் எத்தனை எத்தனையோ ஆண்டுகள் அவன் பல்வேறு வகை உயிரினத்திடைப்பட்டு நின்று, பின் இந்த நிலையைப் பெற்றான். அப்படியே மனித நிலை பெற்ற பின்பும் ள த் த னை எத்தனையோ ஆண்டுகள்-எண்ணற்ற ஆண்டுகள் கழித்தே அவன் சமுதாய உணர்வு, மொழி உணர்வு, தெய்வ உணர்வு இவைகளைப் பெற்றிருக்க வேண்டும். இவற்றுக்கிடையில் மனித வாழ்வு, பிற உயிரின வாழ்வொடு எவ்வாறு பின்னிப் பிணைந்து நின்றது என்பதும் அவ்வாழ்வில் அவன் எப்படிப் படிப் படியாக முன்னேறினான் என்பதும் இன்னும் ஆராய்ச்சி யாளர்களிடையில் முடிவு கட்டா வகையில் உள்ளன. எப்படியாயினும் கண்ணாலும் காட்டாலும் தன் கருத்த்ை உ ண ர் த் தி எண்ணற்ற காலங்கழித்த ம ணி த ன், எண்ணாலும் எழுத்தாலும் தன் கருத்தை உணர்த்தத் தொடங்கிய காலம் அவன் வரலாற்றில் பொற்காலமாகும். ஆம்! மொழி தோன்றிய காலம் எதுவாயினும் அது போ ற் ற க் கூடியதேயாகும். அவ்வாறு தோன்றிய மொழியும் தோன்றிய அந்த நாளிலேயே செப்பம் செய்யப் பெற்ற செம்மை மொழியாய், ஒலிவடிவம், வரிவடிவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/108&oldid=684495" இலிருந்து மீள்விக்கப்பட்டது