பக்கம்:தாய்மை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் ** 107.

இரண்டும் கொண்டு ஏற்றம் பெற்ற செம்மை மொழியாய் இலக்கியம் மலர்ந்து இலக்கண வரம்பு உற்ற மொழியாய் இருந்திருக்க முடியாது என்பது தேற்றம். அந்த மொழி வளர்ச்சியின் வரலாற்று ஆராய்ச்சி இன்னும் தொடக்க நிலையிலேதான் இருந்து கொண்டிருக்கிறது. அந்த மொழி வளர்ந்த வரலாற்றில் பாட்டும் இலக்கியமும் தோன்றிய காலம் சிறந்த காலமாகும். எனவே மக்கள் வாழ்வொடு பின்னிய மொழியும் அதன்வழி அமைந்த பாட்டும் இலக்கியமும் நன்கு ஆராயப் பெற்று, அவற்றின் நலம் கண்டாலன்றி உண்மையில் மனித சமுதாய வரலாற்றை யாரும் அறிந்தவராக முடியாது. இந்த உண்மையை உணர்ந்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை, இவ்வாண்டு இத்துறையில் கருத் திருத்தி, என்னைப் பழந்தமிழ்ப் பட்டின்-கவிதையின் வளர்ச்சியைப் வற்றி ஆராயச் சொல்லியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் நான் ஏதோ புதிய ஆய்வுகள் செய்து, இல்லாத வற்றைக் கண்டு உணர்த்தப்போகிறேன் என எதிர்பார்க்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன். அல்லது தான் காட்டும் ஒருசில கருத்துக்களும் முடிவுகளும் யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்றும் எண்ளை வேண்டுவ தில்லை. இன்றைய என் வாழ்வின் குழ்நிலையில் இப்பணியை ஏற்கவே தயங்கியும், மயங்கியும் நின்றேன். எனினும் அன்பரின் வற்புறுத்தலும் மாற்றம் தேற்றம் அளிக்கும் என்ற உணர்வும் ஒரளவு என்னை இன்று உங்கள் முன் நிற்கச் செய்துள்ளன. எனவே, எனது இந்த ஆய்வுக் கட்டுரை முற்றிய திறன் உடையது என்று யாரும் கொள்ள வேண்டா எனக் கேட்டுக்கொண்டு, மேனே செல்கிறேன்.

தமிழ்மொழி தொன்மையானது என்பதனை யாரும் மறுக்கமுடியாது. தொன்மைக்கு எல்லை வகுக்கும் வகை யில் ஒருவேளை மாறுபாடு இருக்கலாம். இன்றைய உலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/109&oldid=684496" இலிருந்து மீள்விக்கப்பட்டது