பக்கம்:தாய்மை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை

9


சத்தியாம் அன்னையினையே அவருக்குத் தாயாகமட்டுமன்றிமகளாகவும்காட்டுவர்.தாயுமிலிதந்தையிலிஎனப்பாடியஅதேமணிவாசகர், “இமவான் மகட்குத் தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தஐயன்’

                        (பொற் சுண் - )

எனப்பாடுவர். எனவே கணவனாக, மகனாக, தந்தையாக, உடன்பிறந்தவனாகச் சக்திக்கு இறைவன் உள்ள ஏற்றத்தைப் பாடுகின்றார். கருவுறாது அண்ட கோளமனைத்தையும் ஈன்றும் கன்னியாக இருக்கும் என் தாய் அந்தத் தலைவனையும் பெற்றவளாகின்றாள். இதே உண்மையைக் குமரகுருபர்,


'கனக மார் கவின் செய் மன்றல்
அனக நாடகற் கெம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்"

(சிதம்பரச் செய்யுள்-)

என்றும்,திருமூலர், 'வாயும் மனமும் கடந்த மனோன்மணி பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அவனுக்குத் தாயும் மகளும் நல்தாரமு மாமே'

           ‌              (திருமந். 1178) என்றும் காட்டுவர். இக் கருத்து ஒருவேளை பிறசமயத் தவருக்கு எள்ளிநகையாடத் தக்கது போன்று தோன்றினும் ஆயும் அறிவும் கடந்து அவற்றால் தம்மையறிந்த மெய் யடியவர்களுக்கு இதன் உண்மையும் அதன்வழி உணர்த்தப் பெறும் தாய்மையின் சிறப்பும் விளக்க முறும். 

இனி, இறைவனே இத்தாயுருவெய்தி வந்து. இத்தாய்மைப் பண்பைக் காத்த வகையினைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/11&oldid=1232952" இலிருந்து மீள்விக்கப்பட்டது