பக்கம்:தாய்மை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 109

இருந்ததாகக் கொண்டு, இக்கருத்தை ஆராயின் நமக்குத் தோன்றுவது ஒன்றே. இரண்டு சங்கங்களுக்கும் இடையில் ஒரு கடல் ஊழி உண்டாயிற்றென்றும், அதில் தற்போதைய குமரிமுனைக்குத் தெற்கே இருந்த பல பழந்தமிழ் நாட்டுப் பகுதிகள் மறைந்தன என்றும் கூறுவர். இந்த மரபுவழிக் கதையின்படி ஆராயின், ஒருவேளை தொல்காப்பியம் இயற்றிய காலத்துக்கு முந்தியனவும், அவர் காலத்தனவு மாகிய இடைச்சங்கப் பாடல்கள் அனைத்தும் எப்படியோ கடல் ஊழியால் மறைந்தொழியவும், இலக்கணம்ாகிய தொல்காப்பியம் பிழைத்து நிற்க, அதன் பெருநெறி பற்றி அதையே தம் இலக்கணமாகக் கொண்ட கடைச் சங்க காலப் புலவர்கள் பாடல் இயற்றினார்களோ எனக் கொள்ள இடம் உண்டாகிறது. தொல்காப்பியர் காலம் ஏதுவாயினும் அது நீண்ட காலமாகத் தமிழ்நாட்டில் இலக்கண மரபைக் காத்து வருகின்றது என்பது கண்கூடு அன்று தொட்டு இன்று வரையில் அதற்டோகஅதனொடு சார்த்திக் கூறும் வகையிலாக வேறு ஐந்திறன் காட்டும் இலக்கண நூல் தோன்றாமையே அதன் சிறப்பை வலியுறுத்துவதாகும். பிற்காலத்தில் வந்த நன்னூல், அக்கால மொழி வழக்குக்கு ஏற்ற புணர்ச்சி, சொல் அமைப்பு, தொகை மரபு முதலிய சிலவற்றைச் சேர்த்து எழுத்து, சொல் என்ற இருவகை இலக்கணங்களை மட்டும் ஒரு வகையில் உரைக்கின்றது. என்றாலும் தொல்காப்பியத்தை நோக்க அது எங்கோ நிற்க வேண்டிய ஒன்று என்பதை ஆன்றோர் தெளிந்துள்ளனர். மற்றைய பிற்கால இலக்கண நூல்கள் தோன்றிய சில கால எல்லையிலேயே தத்தம் முடிவினைத் தேடிக் கொண்டிருப் பதால் அவை பற்றி நாம் நினைக்கவும் வேண்டா.

- தொல்காப்பியம் இவ்வாறு காலத்தை வென்று இரு பெருஞ் சங்கங்களின் வழிகாட்டி நூலாக நின்று, பின்னும் இருபது நூற்றாண்டுகள் கழித்தும்.வாழ்வதற்குக் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/111&oldid=684499" இலிருந்து மீள்விக்கப்பட்டது