பக்கம்:தாய்மை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தாய்ம்ை

அதன் உண்மையை விளக்கும் திறனும், மொழி அமைப்பில் அதன் வரையறுத்த முடிவுகளும், மொழியின் உண்மையான அமைப்பையும் அம்மொழி பேசும் மக்களின் உண்மை. வாழ்வினையும் விளக்கிக் காட்டும் பொருளதிகார அமைதி களுமேயாகும். எனவே அத்தகைய தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் வரும் செய்யுளியல் அடிப்படையில் சில உண்மைகளைக் காணல் நலம் பயப்பதாகும்,

செய்யுள்

செய்யுளுக்குத் தொல்காப்பியர் இலக்கணம் செய்துள் ளார். செய்யுள் என்பது செய்யப்படுவது என்ற பொருளில் அமைவது. அது உரைச் செய்யுள், பாச் செய்யுள் என இருவகையாகப் பகுக்கப்பெறும். பிற்காலத்தில் யாப்பிலக் கண்ம் செய்த புலவர்கள் அனைவரும் பாச்செய்யுளையே செய்யுளாகக் கொண்டு, பாவெனும் அதன் தன்மை கூறுவாராய்க் கட்டுவது என்ற பொருளில் யாப்பு’ என்ற சொல்லமைத்து, அ ைத க் ட் டு ம் இலக்கணத்துக்கு “யாப்பிலக்கணம்’ என்ற பெயரும் கொடுத்து இலக்கணம் செய்தனர். செய்யுள், செய்யப்படுவது என்ற பொருளில் வழங்கினும் அதன் செம்மைத் தன்மை சிறந்து விளங்கு வதாகும். வறண்ட, வற்றிக்கிடந்த-நிலை மாறிக் கிடந்த வயலை மனிதன் செவ்வகையால் செம்மையாக்கி அதற்குச் செய்’ எனவே பெயரிட்டான். நன்கு செம்மை செய்யப் பெற்றது. நன்செய் ஆயிற்று; அல்லாதது புன்செய்; ஆயிற்று. எனவே நன்கு செப்பம் செய்யப்பெறும் பா அல்லது உரையே செய்யுள் எனக் கொள்ளக் கிடக்கின்றது. செய்யுள்’ என்ற சொல், பாட்டினை மட்டுமன்றி உரையையும் குறிக்கும் என்ற உண்மை, பழங்காலத்தில் மட்டுமன்றிப் பிற்காலத்திலும் வழங்கின உண்மையைத் திருவாலவாயுடையான் தி ரு வி ைள யா ட ல் (19-6) முதலியன விளக்கும். எனவே, தொல்காப்பியர் தம் செய்யுளியலில் பா, உரை என்ற இர ண் டி ற்கு ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/112&oldid=684500" இலிருந்து மீள்விக்கப்பட்டது