பக்கம்:தாய்மை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 20 தாய்மை

பகுதி 2 osfi

செய்யுளியல் பற்றியும் அதன் பெயரமைப்பைப் பற்றியும் முன்னரே காட்டியுள்ளேன். அச் செய்யுளியல் பா'வின் அமைப்பினையும் வகைகளையும் பயனையும் பிறவற்றையும் விளக்கிக் காட்டுவதை இனி எண்ணிக் காணலாம். தொல்காப்பியர் பொருளதிகாரத்திலே வாழ்வின் அடிப்படையாகிய அகமும் புறமும் கூறிப் பொருளியல் காட்டி நிற்கின்றார், பின் அவற்றை விளக்கிக் காட்டும் இலக்கியமாகிய ‘பா'வின் தன்மையைக் காட்ட நினைந்து அதற்கு அடிப்படையான மெய்ப்பாடு, உவமம் ஆகிய இரண்டையும் முன்னே விளக்கி, அவற்றைக் கொண்டு அவற்றையும் தன்னையும் சிறப்பித்துக் கொள்ளும் ஒரே கருவியாக ஒப்பற்று உள்ள செய்யுளைக் காட்டுகின்றார்: இவை யாவும் கால வெள்ளத்தால் மாறி நிலை கெட்டு உருத்திரிந்து போகாதபடி இறுதியில் மரபினை நன்கு விளக்கித் தம் நூலை முடிக்கின்றார்: இறுதியில் காட்டும் மரபுநிலை அடுத்த செய்யுளியலுக்கும் அனைத்துப் பொருளதிகாரத்துக்கும் மட்டுமன்றித் தொல் காப்பியம் முற்றுக்கும் பொருந்தும் ஒன்றாகும். அந்த மரபின் திண்ணிய நிலையினால்தான், பிற திராவிட மொழிகள் உருக்கெட்டுச் சிதைந்து வேற்று மொழி மரபினைச் சார்ந்தனவோ என நினைக்கும் அளவுக்கு மாறி நின்ற போதிலும், தமிழ் தன் சீரிளமைத் திறன்’ குன்றாது செம்மை நிலை மாறாது வாழ்ந்து வருகின்றது. நாம் ஈண்டுச் செய்யுள் வழியே தொல்காப்பியர் காட்டும் மரபினைக் காணல் ஏற்புடைத்தாகும்.

அகம், புறம் இரண்டின் அடிப்படையிலே தோன்றும்

மெய்ப்பாடும். அதன் வழி உருவாகும் செயல்களும் அச் செயல்களை விளக்க வரும் உவமங்களும் செய்யுள் வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/122&oldid=684511" இலிருந்து மீள்விக்கப்பட்டது