பக்கம்:தாய்மை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி I 19

மூழ்கித் திளைத்த நியூட்டன் போன்ற பேரறிஞர்களை, ‘அல்லும் ப்கலும் ஆய்வுக் களத்தில் ஏன் இப்படி அல்லல் உறுகின்றீர்கள்?’ என்று கேட்டால், அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? ஒரு புன்சிரிப்பை வேண்டுமானால் பதிலுக்கு அவர்கள் புலப்படுத்தலாம். அவ்வளவேதான். உணவு கொண்டதையும் கொள்ளாததையும் கூட அறியமுடியாது. ஏதோ உணர்ச்சி தன்னைச் செலுத்த, அதன் வழியே தன்னை ஒப்படைத்து அதனால் ஒரு பேருண்மையைக் கண்டு பிடிக்கும் முயற்சியிலேயே அந்த விஞ்ஞானியின் கருத்தும் வாழ்வும் கழிகின்றன. கவிஞன் நிலையும் அத்தகையதே. அவன் ஏன் பாடுகின்றான்? இதற்குப் பதில் சொல்லத் தெரியாது அவனுக்கு. அவனை அறியாமல் ஏதோ ஒர் உள்ளொளி அவனை ஆட்கொள்கிறது; அவன் உணர்வை மலைக்குக் கொண்டு செல்கிறது; ஆற்று வெள்ளத்தில் மூழ்க வைக்கிறது; கதிரவன் வெம்மையில் நி ற் க வைக்கிறது. வான வெளியில் சிறகொடு பறக் க வைக்கிறது; இப்படி எத்தனை எத்தனையோ வகைகளில் அந்த உணர்ச்சி கவிஞனை ஆட்டிப் படைக்கின்றது. அந்த உணர்ச்சி வழியே அவன் ஈர்த்துச் செல்லப்படும் வேளை களில் அவன் வாயிலிருந்து முத்துக்கள் உதிர்கின்றன. அம் முத்துக்களாகிய .ெ சா ற் க ேள கவிதைகளாக உருப் பெறுகின்றன. g

இத்தகைய கவிதைகள் தமிழில் மிகப் பழங்காலந் தொட்டு வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் பெரும் பாலன நமக்கு இன்று கிடைக்கவில்லை. எனினும் அவற்றுக்கு, இலக்கணங் கண்ட தொல்காப்பியர், அவை பற்றியெல்லாம் சுட்டிக் காட்ட, நம்மால் காண முடிகின்றது. எனவே இனித் தொல்காப்பியர் வழி நின்று அவர் காட்டும் பாநலத்தினை உற்றுணர்ந்து, அவர் காலந் தொட்டுக் காப்பிய காலம் வரையில் தமிழ்ப் பாநலம் எவ்வெவ்வாறு அமைந்து-வளர்ந்தது எனக் கண்டு அமைவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/121&oldid=684510" இலிருந்து மீள்விக்கப்பட்டது