பக்கம்:தாய்மை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தாய்மை

இன்னும் எத்தனையோ, பாடல்கள் உள்ளன, அவற்றைப் கற்றிப் பின்னர் ஆராங்வோம்.

இத்தகைய கவிதைகளைக் கவிஞன் ஏன் பாட வேண்டும்? அவனுக்கு வேறு வேலையில்லையா? இவ்வாறு பாடிப் பிழைப்பதுதான் அவன் தொழிலா? அன்றிப் புகழுக்கு ஆசைப்பட்ட கவிஞன், என்றென்றும் புகழால் தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தால் இக் கவிதை களைப் பாடுகின்றானா? இக் கேள்விகள் சிலர் உள்ளத்தில் எழுதல் இயல்பு. ஆனால், அத்தகைய ஒரு குறிக்கோளுடன் கவிஞன் ஒரு கவிதையைப் பாட இயலாது. அப்படிப் பாடினாலும், பெரும்பாலும் அவன் இறப்பதற்கு முன்பே அக் கவிதை இறந்துவிடும். இன்று நாம் கண் முன்னே எத்தனையோ கவிஞர்களைக் காண்கின்றோம். அவர்கள் பாடல்கள் பத்தி பத்தியாகப் பத்திரிகைகளில் வெளி வருகின்றன. அவற்றைப் பாராட்டவும் சிலர் இருக்கின் றார் க ள். எனினும், அவை நீர்மேற் குமிழி போலத் தோன்றிய அந்த அடிச்சுவட்டிலேயே தம் கல்லறைக்குச் சென்றுவிடுவதை நாம் அறியோமா! எனவே, கவிஞன் அக் கவியால்தான் வாழ வேண்டுமென்று நினைத்தாலும், புகழைத் தேட வேண்டுமென்று கருதினாலும் அவன் எண்ணத்தில் மண் விழத்தான் செய்யும். கவிஞன் கைம்மாறு கருதாதவன். அங்கனமாயின் ஏன் பாடவேண்டும்? பலன் ஒன்றையும் எதிர்பாராது அவன் பாடினால், அவன் வாழ்வது எவ்வாறு? அந்த நிலை பற்றி எண்ணுவதுதான் உண்மைக் கவிஞனை நம்முன் கொண்டு வந்து காட்டும். உண்மைக் கவிஞன் ஒருவனை முன் நிறுத்தி, அவனை அவ்வாறு கவி பாட வேண்டிய காரணம் என்ன என்று கேட்டால், நிச்சயம் அவன் பதில் சொல்ல முடியாது; அவன் தனக்காகப் பாடவில்லை: கவிஞன் மட்டுமன்றிப் பெரும்பாலாரான மெய்க்கலைஞர்கள் அவ்வாறுதானே உள்ளார்கள்? விஞ்ஞானக் காட்சியில் தன்னை மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/120&oldid=684509" இலிருந்து மீள்விக்கப்பட்டது