பக்கம்:தாய்மை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தாய்மை

மட்டுமே ஈண்டுக் கருதலாம் என எண்ணுகிறேன்: எனினும் இடையிடை உரையினைப் பற்றிய குறிப்பும் விளக்கமும் இடம் பெறாமற் போகாது என அஞ்சுகிறேன். எப்படியாயினும் பழந்தமிழ்ப் பாநலத்தினை அவர் வழியே ஒரனவு காண முயல்வோம்.

உறுப்புக்கள்

3.

இச் சூத்திரத்தில், ஆசிரியர் தொல்காப்பியனார் முதலில் பாவினுக்கு இன்றியமையா உறுப்புக்களைச் சொல்லுகிறார். செ ய் யு ளு க்கு த் தொல்காப்பியர் உறுப்பாகக் கூறுவன முப்பத்து நான்காகும். அவற்றை இருகூறுபடுத்திக் காட்டுகிறார் அவர். முதல் இருபத் தா றினையும் ஒரு பிரிவாகவும் பின் எட்டினை மற்றொரு பிரிவாகவும் பிரித்து, ஒரே சூத்திரத்தில் இணைத்துக் காட்டுகின்றார். மாத்திரை, எழுத்தியல், அசை வகை, வாத்த சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை வகை, ந்ோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள்வகை, துறை, மாட்டு, வண்ணம் என்று இருபத்தாறு காட்டி, பின் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எட்டினை யும் காட்டி முப்பத்து நான்காக்குகின்றார். இதிலும் முன்காட்டிய இருபத்தாறில் பா வரையில் ஒரு பிரிவாகவும் அடுத்தவற்றை மற்றொரு பிரிவாகவும் கொள்ளலாம். ஏனெனில் ‘பா'வின் நலம் காணும் நாம் அதற்கு முன்னும் பின்னும் உள்ளவை அதனொடு எவ்வகையில் தொடர் புடையன என்று அறியக் கடமைப்பட்டிருக்கிறோம். மாத்திரை தொட்ங்கி நோக்கு வரையில் அமைந்த பத்தும் பாவிற்கு உறுப்பென எண்ணுமாறு அமைய, பின்வரும் பதினாறும் (அளவியல் முதல் வண்ணம் வரை) அப் பாவின் நலன் காட்டுவனவாக அமைவதை நோக்கின் இவ்வேறு பாடு தேவை என்பது தெளிவாகும். பா அமைவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/124&oldid=684513" இலிருந்து மீள்விக்கப்பட்டது