பக்கம்:தாய்மை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ச் கவிதைகளின் வளர்ச்சி

இன்றியமையாது வேண்டப்படும் உறுப்புக்கள் எவை யெவை எனக் காட்டி, அவற்றில் இன்றியமையாத நோக்கினைப் ‘பா’வி ன் மு ன் ைவ த் து ச் சிறப்பிக் கின்றார். மற்ற உறுப்புக்கள் அனைவருக்கும் அறிமுக மானவை. அவை பற்றிப் பின்வரும் யாப்பிலக்கண ஆசிரியர்களும் காட்டுகின்றார்கள். ஆனால் நோக்கு” என்பதைப் பின் வந்தவர் தொடவில்லை. அதனாலேயே பிற்காலப் பாடல்களில் நோக்கி துணித்துணரத்தக்க ஆழ் பொருள் காணக் கிடைப்பதில்லை. நோக்குக்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியர்,

மாத்திரை முதலா அடிகிறை காறும் நோக்குதற் காரண கோக்கெனப் படுமே ‘

(செய். 104),

என்கிறார். இதற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர்,

மாத்திரை முதலிய உறுப்புக்களைக் கொண்ட அடி கிரம்பும் துணையும் கேட்டோர்.மீண்டும் கோக்கிப் பயன் கோடலையுடையவாகச் செய்யும். கருவியை நோக்கு என்பர் ! .

எனக் காட்டுவர். எனவே பாவின் ஒவ்வொரு அடியிலும் அமைந்த பொருளின் செறிவு, திட்பம், செம்மை, தெளிவு, அருமை, ஆழ்பொருள் ஆகியவற்றை உற்றறியும் நிலையைப் பாவின் ஒர் உறுப்பாகவே தொல்காப்பியர் காட்டும் நிலை எ ண் ணி க் காண த் தக்கது. இச் சூத்திரத்துக்கு எடுத்துக்காட்டாக நச்சினார்க்கினியர், ‘முல்லை வைந்துனை எனத் தொடங்கும் அகநானூற்று நான்காவது பாடலை எடுத்துக்கொண்டு, அடியடியாகப் பகுத்துக்கொண்டு, அவ்வடியையும் காட்டும் ஆழ் பொருளையும் பிற நலன்களையும் எடுத்துக் காட்டுவர். அவையெலாம் ஈண்டு விரிப்பிற் பெருகும் என அச்சத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/125&oldid=684514" இலிருந்து மீள்விக்கப்பட்டது