பக்கம்:தாய்மை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 125

இச் சூத்திரத்தில் வற்புறுத்துகின்றார். அதனாலேயே இ க்காலத்திய பாடல்கள் யாவும் வெறும் எழுத்து அசை சீர் என்னும் வகையில் அமையாது, உயிரோட்டமாகிய குறித்த பொருளை முடிய தாட்டும் முழுத்திறன் பெற்ற வையாக விளங்கின எனக் காண முடிகின்றது.

இந்த யாப்பினையும் பிற்காலத்தவர் கூறுவது போன்று வெறும் பாவினுக்கு மட்டும் உரிமையாக்க விரும்பவில்லை தொல்காப்பியர். பின் வந்த யாப்பருங்கலமும் அதன் உரையும் இந்த யாப்புப் பாட்டினுக்கே பொருந்துவதாகும் எனக் காட்டுவதோடு அதற்கேற்பவே தம் சூத்திரங் களையும் அவற்றின் பொருள் அமைதிகளையும் ஆக்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம். யாப்பருங்கலச் செய்யுளியல் முதல் சூத்திர உரையில் அதன் ஆசிரியர்,

“தாம் என்பது செய்யுட்களைச் சிறப்பித்தற்குச் சொல்லப் பட்டது......... அவ்வாறு சிறப்பிக்கவே. சொற்பொருள் உணர்வு வண்ணங்கள் தொடர்ந்து, குற்றம் இன்றி, அவை தம்முள் தழுவும் கோள் உடையவராய், இன்பம் பெருக்கி, அம்மை முதலாகிய வனப்பு அலங்காரமும் செம்மையும் செறிவும் பெறுவுழிப் பெற்று. இம்மை மறுமைக்கு நன்மை பயந்து, எல்லாருக்கும் புலனுற நடை பெறுவது, யாப்பு. பாட்டு, செய்யுள்’ என்று சொல்லப்படுவது ஆயிற்று, எனவே செய்யுள் எனப் பெயர் பெற்றும், ஓசைப் பொலிவு முதலாகிய உறுப் பொடு புணர்ந்து உரையும் நூலும் வகையும் மந்திரமும் முதுசொல்லும் பி சி யு ம் ஆகிய செய்யுளல்ல. ஈண்டு வேண்டப்படும் செய்யுள் என்பது உம் சொல்லப்படும் எனக் கொள்க’

(யாப்பருங்கலம்-செய், சூ. 1, பக். 1661 இந்த உரையின்படி யாப்பில் பிறவற்றை இதன் ஆசிரியர் விலக்கிப் பா ஒன்றனையே கொண்டாரென எண்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/127&oldid=684516" இலிருந்து மீள்விக்கப்பட்டது