பக்கம்:தாய்மை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தாய்மை

வேண்டியுள்ளது. ஆனால் த்ொல்காப்பியர் யாப்பின் விளக்கத்தை,

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுமொழி அவ்வேழ் கிலத்தும்

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

காற்பெய ரெல்லையகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்’

|செய்.79)

என்று காட்டித் தாம் மட்டுமன்றி தமக்கு முன் வாழ்ந்த புலவர்களும் அக் கருத்தையே கொண்டிருந்தவர்கள் எனத் தெளிவாகக் காட்டுகிறார். எனவே தொல்காப்பியர் கருத்துப்படி யாப்பு வெறும் பாட்டாக மட்டுமன்றிப் பிறவாகவும்-பாட்டு உரை, நூல், மந்திரம், பிசி, அங்கதம், முதுசொல் எனும் பல வகையாகவும் அமைந்து தமிழ் வழங்கு நிலமுழுதும் மரபு வழி கெடாவகையில் சிறக்க இருந்த ஒன்று என்று தெளிதல் சிறப்புடைத்தாம். இவற்றால் அக் காலத்தில் பாட்டு மட்டுமன்றி உரையும் பிறவும் நாட்டில் பெரு வழக்காக இருந்தன என்பதும் அவற்றுள் சில காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என்பதும் கொள்ள வேண்டுவனவாகும்.

ஒசைவும் அமைப்பும்

தொல்காப்பியத்தில் காட்டப்பெறுகின்ற பாடல்கள் வரையறைக்கு உட்பட்டனவே. அகவல், வெண்பா, கலி, வஞ்சி என்ற நான்கு வகைப் பாடல்களே சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. பாவிற்கு இலக்கணம் கூறி, அவற்றை வகைப்படுத்து முன்பே (சூ. 105), தொல்காப்பியர் அவற்றிற்குரிய ஒ ைச யி ைன உ ண ர் த் து கி ற ா ர். (கு. 81-86). இவ ற் றா ல் இந் த ப் பா க் க ள் எழுதப் பெறு முன் ஒசை வகையால் ஒலிக்கப் பெற்று, பயின்று வழக்காற்றில் வந்தபின் எழுதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/128&oldid=684517" இலிருந்து மீள்விக்கப்பட்டது