பக்கம்:தாய்மை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 127

பெற்றனவோ என்று நினைக்க இடமுண்டு. பிற்காலப் புலவர்கள் போன்று, எழுத்தும் நடையும் ஒசையும் காட்டுவான் வேண்டி, கோலும் ஒலையும் கொண்டு, எண்ணி எழுத்தில் வடித்துப் பின் இசை கூட்டிப் பாடும். நிலையில் அல்லாது, முன்பு உளங்குளிர்ந்த போதெலாம். உவந்துவத்து பாடி, அதன் பிறகே அவற்றை ஏட்டில் உருவ எழுத்தில் வடித்தார்கள் என்று கொள்ளல் பொருந்துவதாகும். இம்மரபு தொல்காப்பியத்திற்கு. முற்பட்ட தொல்லோர் நெறியின் சென்ற மரபெனக் கொள்ளல் வேண்டும். .

இப் பாடல்கள் நான்கும் வாழ்வில் எவ்வாறு பயன் படுகின்றன என்பதையும் அவற்றின் ஓசை வழியே அவை செயல்படு முறையினையும் நச்சினார்க்கினியர் விளக்கிக். காட்டுவர். ஆசிரியத்துக்கு அகவல் ஓசையென்று காட்டி, ‘அகவிக் கூறலின் அகவலாயிற்று, என்பர் நச்சினார்க், கினியர். இவ்வோசைக்கே தூக்கு என்று பெயருண்டு என்பர். பாவின் ஒசை வேறுபாட்டினைத் தூக்கி நிறுத்துக் காணலின் இப்பெயர் பெற்றது என்பர். எனவே இவ்வோசையே பாட்டின் வேறுபாடுகளை நோக்கி உணர வைப்பதாகும். அ. க வ ேலா ைச ைய விளக்க வந்த. நச்சினார்க்கினியர், . அகவிக் கூறலின் அகவலாயிற்று. அஃதாவது கூற்றும் மாற்றமுமாகி ஒருவன் கேட்ப, அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங்கருதியவாறெலாம் வரையாது கூறுவது. அதனை வழக்கினுள் அழைத்தலென்ப. அங்க ன ம் கூறுமிடத்துத் தொடர்ந்து கிடந்த ஓசை அகவலாம். அவை களம்பாடு பொருநர்க்கண்ணும், கட்டும் கழங்கும். இட்டுரைப்பார்க்கண்ணும், தம்மின் உறழ்ந்துரைப் பார்க்கண்ணும், பூசலிசைப்பார்க்கண்ணும் கேட் கப்படும் வழக்கின்கண் உள்ளதாய் அங்ஙனம் அழைத்துக் கூறும் ஓசை ஆசிரியப்பா என்றவாறு’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/129&oldid=684518" இலிருந்து மீள்விக்கப்பட்டது