பக்கம்:தாய்மை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..I 28 - தாய்மை

என்று காட்டுவர். பிற உரையாசிரியர்களுக்கும் இவ்வுரையே ஏற்புடைத்தாக அமைகின்றது. அகவல் நாட்டில் எவ்வெவ்வாறு வழக்கத்தில் உள்ளதென்பதும் அதன் பயன் எத்தகையதென்பதும் தெளிவாகின்றது. பின் வந்த யாப்பிலக்கண நூலாசிரியர்கள் எல்லாரும் வெண்பாவினை முதற் கூறினார்களேனும் தொல்காப்பியர் ஆசிரியத்தினையே முதற் கூறிய சிறப்பு, அதன் பெரு வழக்குப் பற்றியும் அதன் பயன் பற்றியும் என அறிதல் வேண்டும். அவர் நூல் இலக்கணமாகக் கொள்ளப் பெற்ற கடைச்சங்க காலத்தில் நூல்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆசிரியத்தாலே ஆக்கப்பெற்றிருப்பதை எண்ணிப் பார்ப்பின் இவ்வுண்மை நன்கு விளங்கும். இவ்வாசிரியப் பாவே உலகில் பலர் உணரப் பரிமாறுவதற்காக வழங்கப் பெற்றமையின் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு ...முன்பும் இது பல வகையில் சிறந்திருக்க வேண்டும் எனக்

கொள்ளல் வேண்டும்.

வெண்பா அகவுதலில்லாத ஓசையுடைத்து’ என்பர். இளம்பூரணரும், நச்சினார்கினியரும் இதை நன்கு வலியுறுத்துவர். அகவுதல் ஒரு தொழில்; அத்தொழில் இதன் கண் இல்லாமையின் அஃதன்று’ என்றார் என ..இளம்பூரணர் சூத்திரச் சொல்லுக்கு உரை கூறுகின்றார். தச்சினார்க்கினியரும் அழைத்துக் கூறாது ஒருவர்க் கொருவன் இயல்பு வகையால் ஒரு பொருண்மையைக்

கட்டுரைக்குங்கால் எழுந்த ஓசை செப்பலோசை எனப்படும். அவ்விரண்டுமல்லது வழக்கினுள் இன்மையின் *அஃதன்று என்ப” என அவைகளின் இலக்கணம்

பெறலாயிற்று’ என்பர். தொல்காப்பியர் ஆசிரியத்துக்கு அகவல் ஓசையைச் சொல்லி, வெண்பாவிற்கு,

அஃதான்று என்ப வெண்பா யாப்பே (செய். 82)

எனக் காட்டுவர். அஃதான்று, அஃதன்று எனக்கொண்டு இவர்கள் இவ்வாறு விளக்கம் தருகின்றனர். இவற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/130&oldid=1019190" இலிருந்து மீள்விக்கப்பட்டது