பக்கம்:தாய்மை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் கவர்ச்சி

நாம் பெறும் கருத்து ஒன்றேயாகும். முன்னே கண்ட

Lit}; மக்கள் நேர்முகமாகவும், சுட்டியும், ஒருவர் கருத்தை, ஒருவர் பரிமாறிக்கொண்டு அகவி உணர்த்தும் வகையில்

பாடப்பெறும் பாடல் அகவலென்பதும், அவ்வாறன்றி ஒரு பொருளின் இயல்பு அல்லது தன்மையை விளக்கிக் காட்டுவது, அகவும் பேச்சு வழக்கன்றிச் சுட்டும் வழக்கு

நெறியில் வருவது வெண்பாவென்பதும் பெறப்படுவதா

யிற்று. இவ்வுண்மை சங்க இலக்கியத்தாலும் அதனை:

சார்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களானும் நன்கு. உணரப்படும். தொல்காப்பியச் சூத்திரங்களுக்கு நான்

முன்னரே காட்டிபடி அவர் காலத்தும் அதற்கு முன்பும் எழுதப்பெற்ற பாடல்கள் என்ன காரணத்தாலோ பெறப் படாமையின் கடைச் சங்கப் பாடல்களே மேற்கோளாகக்

காட்டப்பெறுகின்றன. எனவே நாமும் அதையே காட்ட

வேண்டிய நிலையில் உள்ளோம். அகம் போன்ற அகப்

பாடல்களும் புறம் போன்ற புறப் பாடல்களும் ஒருவரை

ஒருவர் அகவும் வகையில் அமைகின்றமையின் அகவற். பாடல்களாக அமைய, நீதியைச் சுட்டிக்காட்டும் குறள், நாலடி முதலியவை வெண்பா யாப்பினில் அமைவதைக் காண்கிறோம். இதனால் மற்றொரு உண்மையும் நமக்குப் புலனாகின்றது. வெறும் பாட்டுக்காகவே பாட்டு’ என்று அடியையும் அளவையும் காட்டிப் பெயரிடும் நிவை

பிற்காலத்தில் ஏற்பட்ட போதினும், பண்டைக்காலத்தில்

பொருளின் அடிப்படையிலும் அவை வழங்கும் நெறியின்

அடிப்படையிலும் பாவும் துளக்கும் அமைந்தன எனக் காண முடிகின்றது. இவை பற்றிச் சற்று விளக்கமாகப் பின்னே கதி னெலTL).

இவ்வாறு ஆசிரியமும் வெண்பாவும் அமைய, கலியும் வஞ்சியும் முறையே துள்ளல் ஓசை, துரங்கல் ஓசை உடையனவாய் வரப்பெறும் என்பர் தொல்காப்பியர். துள்ளுதலாவது ஒழுகு நடைத்தன்றி இடையிடை உயர்ந்து, வருதல்; கன்று துள்ளிற்றென்றாற் போலக் கொள்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/131&oldid=684521" இலிருந்து மீள்விக்கப்பட்டது