பக்கம்:தாய்மை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 130 தாய்மை

என்பர் இளம்பூரணர். அடியிறுதியிற்றுங்காது சீர்தொறும் துங்கப்படும் ஒசை வஞ்சிப்பாவாகும் எனத் தூங்கலுக்கு விளக்கங் கூறிய நச்சினார்க்கினியர், துள்ளலும் தூங்கலும் வழக்கின்கண் நிகழா வென்றுணர்க’ என்று அவை வழக்காறு சிறவா நிலையையும் சுட்டிக்காட்டுவர். சங்க இலக்கிய முழுதும் கலித்தொகை ஒன்றைத் தவிர்த்து வேறு பாடல்கள் இல்லாமையும் வஞ்சி எங்கோ ஒருசில அடிகளில் நிலைபெறுவதும் காண்பார்க்கு இவ்வுண்மை -புலனாகும். இ வ் வாறு இவ்வோசையின் அடிப் படையிலேயே பாவின் பெயர்களை அமைத்துச் சிறப்புச் செய்யும் நிலையும் எண்ணிக் காண வேண்டிய ஒன்றாகும்.

வசைப் பாக்கள்

சிறந்ததாகிய ஆசிரியமும் அடுத்து வரும் வெண்பாவும் உயர்ந்தனவாகவும் மற்றவை இரண்டும் அத்துணைச் சிறவா நிலையில் உள்ளமையின் தமிழ் மரபில் சிறந்தன அல்லவோ-ஒரு வேளை நீக்கப் பெறுமோ என்று ஐயுறு வார்க்கு விளக்கம் தருவது போன்று தொல்காப்பியர், பின் .பா வகையை விளக்கும்போது,

ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென காலியற் றென்ப பாவகை விரியே (செய். 05)

என ஒன்றையொன்று பின்னிக் காட்டி நால்வகைப்

பாக்களும் நற்றமிழ் மொழியில் இடம் பெற வேண்டியவை

என விளக்கி விட்டார். இதற்கு உரை கூற வந்த

நச்சினார்க்கினியர்,

ஆசிரியப்பா வெண்பா என முன் தூக்கிற் கூறியவா றன்றி ஆசிரியம் வஞ்சி என்று கூறினார். வழக்கிற்கும் செய்யுட்குமுரிய ஆசிரியமும் வெண்பாவும் போலச் செய்யுட்குரிய கலியும் வஞ்சியும் சிறப்பிலவோ என் றையுறாமைக்கும் அவற்றிற்கு அவ்வமையுறவுடைய வென்றற்கும் என்க. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/132&oldid=684522" இலிருந்து மீள்விக்கப்பட்டது