பக்கம்:தாய்மை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 13

என விளக்குவர், எனவே, இருவகையிலும் பயிலும் ஆசிரியம் வெண்பா போன்று மற்றவை அத்துணைச் சிறப்பிலவேனும் செய்யுள் வழக்கில் அவையும் தேவை என்பது தேற்றமாகும். -

. இந்த நான்கு வகைப் பாடல்களையும் பிற்காலத்தார் பல வகையில் மாற்றி வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி எனப்பகுத்து அவற்றிற்குச் சாதிக்கட்டுப்பாடும் விதித்து, மனிதனை அரிக்கும் சாதிப் பெயரால் அவற்றையும் அழைத்து, அவர்களுள் மேலோர் கீழோர் இருப்பது போன்றே கவிகளும் இருக்கும் வகை உண்டாக்கிப் பலவாறு இடர்ப்பட்டு அவல முறுவதைக் காண்கிறோம். இளம் பூரணரும் (செய். 101-உரை). யாப்பருங்கல உரையாசிரி யரும் (பக். 173) இவ்வாறு சாதி பற்றி வகுத்துக் கூறுவது இரங்கத்தக்கதாகும். l

இனி நால்வகைப் பாக்களைப் பற்றி யாப்பருங்கல உரை காட்டும் விளக்கம் ஓரளவு எண்ணத்தக்கதாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என முறைப் படுத்தி அவற்றின் வழக்கு, பெயர் அமைப்பு முதலிய வற்றைப் பற்றி அவர் விளக்குவதைக் காணலாம். யாப்பருங்கல உரை இவ்வாறு கூறுகிறது.

வெண்பா :

வேற்று வண்ணம் விரவாது தூய்மை பெற்ற வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளும் சிறப்புடைத்து. அவ்வாறே வேற்றுத் தளையும் அடியும் விரவாது தூய்மை பெற்று எல்லாப் பாவினுள்ளும் சிறப்புடைத்து ஆகலின், வெள்ளை’ என்பது காரணக்குறி. ஆசிரியப்பா :

சீரினாலும் பொருளினாலும் ஒசையினாலும் ஆகிய உண்மையைத் தன்கண் கிறுவிற்றாகலானும் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்கனை ஆசிரியனே போல:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/133&oldid=684523" இலிருந்து மீள்விக்கப்பட்டது