பக்கம்:தாய்மை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை11


எவ்வுயிரையும் காக்கும் கடவுளாகிய அவனுக்கு வேறுபாடு உண்டோ? அதனாலேயே சிராமலையில் ஒரு பெண்ணுக்குத் தாயாகி வந்த தயாமுதல்,அலமரும் பன்றிக்குட்டிகளுக்கும் தாயாக வந்தான் என்று மற்றொரு புராணம் அவன் எளிமையையும் கடமை உணர்வையும் காட்டுகின்றது. ஆம்! பரஞ்சோதியார் அத் தாய்மையை விளக்குவதை நோக்குவோம்.

திருவிளையாடற்புராணத்தேபலகதைகள்வருகின்றன.அவற்றுள்ஒன்றுபன்றிக்குட்டிகளுக்குத்தாயானபடலம்என்பது.தாய்ப்பன்றியும்அதன்கணவனும்சேர்ந்துமாற்றாருடன்போரிட்டுஅவரைத்தொலைத்துத்தாமும்உயிர்விட்டன.பன்னிரண்டுகுட்டிகளும்அலறிஅரற்றின.அந்நிலையைப்பரஞ்சோதியார், 'ஓடுகின்றனஒருமாலுறுவனநிழலைத் தேடுகின்றனதாய்முலைத்தீயபால்வேட்டு வாடுகின்றனதாகவெம்பசிகனிவருத்த வீடுகின்றனவெயில்வெதும்புகின்றனவால்"

                               (பன்றி)
எனக் காட்டுவர். இவ்வாறு வாடும் இளங் குட்டிகளைக் கண்டு தாய்மை உள்ளம் சகிக்குமா? அனைத்துயிர்க்கும் அன்னையாகிய இறைவன் உள்ளம்இளகிற்று; தாயானார்; முலை ஈந்தார். இதைப் பரஞ் சோதியார்.

"ஏன மென்பறழ்உறுகணோய்க்குஇரங்கினர இச்சை ஆணை அன்பு தந்து அகத்துயர் அகற்றுவான் ஈன்ற மான அன்புடைப் பேடையின் வடிவெடுத் தயரும் கானவன் பறழ் கலங்களுர் கலங்கநேர் வந்தார்"

              ‌ ‌                (பன்றி)

என்கின்றார். இவ்வாறு வந்த ஆண்டவனே எல்லா உயிர் களுக்கும் எல்லாப் பிற்விகளிலும் தாயாகித் தந்தையாகிக் காக்கும் தனிமுதல் என்ற உண்மையை அவரே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/13&oldid=1232888" இலிருந்து மீள்விக்கப்பட்டது