பக்கம்:தாய்மை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 135

வருவது என்பது பெறப்பட்டது. இதற்குத் தனி இலக் கணம் கூற வேண்டிய அவசியம் என்ன என்பது விளங்க வில்லை. ஒரு வேளை தொல்காப்பியர் காலத்தில் இப் பாட்டு அதிகமாக வழக்கத்தில் இருந்ததோ என எண்ண வேண்டியுள்ளது. மேலும் நால்வகைப் பாக்களையும். தனித்தனி வகைப்படுத்திக் கூறி, இருவகைப் பாக்கள் இணைந்து ஒன்றாயின் அதற்குப் பெயர் அமைக்க வேண்டி இவ்வாறு கூறினாரோ எனவும் எண்ணலாம். ஆயினும் பின் கலிவெண்பாட்டுப் போன்ற சில இணைந்த பாடல் களைப் பற்றிய விளக்கங்களெல்லாம் வருகின்றமையின் அவ்வாறு கொள்வதும் ஐயத்துக்குரியது; இம்மருட்பாவிற்கு

விளக்கங் கூற வந்த பிற்காலத்திய யாப்பருங்கல. உரையாசிரியர்,

  • வெண்பள் முதல் வந்து ஆசிரியமாய் இறுவன சிறப்பின் மையால் மருட்யா” என்று (யாப். செய். சூ. 2-உரை) தம் உரை கூறி மேலும் பிறர் உரையையும் விளக்கும் ‘ கங்கை யமுனைகளது சங்கமம் போலவும், சங்கரநாரா யணரது சட்டகக் கலவியே போலவும் வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறகிலை வாழ்த்து முதலாகிய பொருள்களின் மேல் யாப்புற்று மருட்சியுடைத்தாகப் பாவி கடத்தலின் மருட்யா” என்று வழங்கப்படும் என் பாரும் உளர், . எனக் காட்டுவர். மருட்பாவிற்கு உரை காட்டிய பேராசிரியர்,

செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாகவும் வருவதா யிற்று மருட்பா. இனி, கிறுத்த முறையானே கொள் வார் வெண்பா முதல் அகவல் பின்னாக, வருவது மருட்பா அன்றெனவும், வெண்பா ஒழித்து ஒழிந்த பன தம்முள் மயங்குவனவே மருட்பா எனவும் கூறுப; கலிப்பாவும் வஞ்சிப்பாவும் ஆசிரியத்தோடும் வெண்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/135&oldid=684525" இலிருந்து மீள்விக்கப்பட்டது