பக்கம்:தாய்மை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தாய்மை

வோடும் மயங்கி இறினும் அவை மருட்பா எனப் படாமையின் அவை,பிழைக்கும் என்பது” .

எனக் காட்டி, வேறு வகையில் கருதுவார் கூற்றை மறுத்து வெண்பா ஆசிரியம் கலந்த ஒன்றையே மருட்பா என நிலை நாட்டுவர். எனினும் இது பெருவழக்கில் இல்லை. தோல்காப்பியர் பின் கைக்கிளையைப்பற்றி விளக்குங்கால்,

கைக்கிளை தானே வெண்பா வாகி ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே ‘’

. (செய். சூத். 119) எனக் காட்டிக் கைக்கிளை மருட்பா’ வால் வழங்கப் பெறும் என வரையறுக்கின்றார். செய்யுள் அமைப்பில் இதன் பெயர் சிறக்க விளங்கவில்லையாயினும் அதுவோ இதுவோ ஏற்போ தடுப்போ என்று இரு உள்ளங்கன் மயங்கும் கைக்கிளையைப் பாடும் காரணத்தினாலே இது மருட்பா என்று வழங்கப்பெறும் பொருட் பொருத்தம் ஏற்புடைத்தாகின்றது. கைக்கிளைப் பொருளில் வழங்கப் பெறும் இம்மருட்பா பிறபொருள்களிலும் ஒரோவழி வழங்கவும் பெறும் வகைகளைப் பின்னர்த் தொல்காப்பியர் ‘புறநிலை எனத் தொடங்கும் சூத்திரத்துள் (161) நன்கு விளக்கியுள்ளார். புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, செவியறிவுறுஉ என்ற மூன்று பொருளிலும் மருட்பா வரும் என்பதாம். -

பரிபாடல் -

இசையொடு பொருந்திய மற்றொரு பாட்டாகிய பரி பாடலைத் தொல்காப்பியர், -

பரிபா ட்ல்லே t - இதுபா வென்னும் இயல்நெறி யின்றி பொதுவாய் கிற்றற்கும் உரித்தென மொழிப எனக் காட்டுவர். இதற்கு அடுத்து அவரே, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/136&oldid=684526" இலிருந்து மீள்விக்கப்பட்டது