பக்கம்:தாய்மை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 135

‘ கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு

செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும்’

1செய். குத். 1211

எனக் காட்டுவர். பாவென்றறியப்படும் இயல்வழி இன்றிப் பொதுப்பட யாக்கப்பட்டு நிற்பது என்று மேலைச் குத்திரத்தில் இதைக் காட்டினாரேனும் இச்சூத்திரத்தில் அப்பாடல் சிறப்பாகக் காமத்தின் அடிப்படையிலே வரு மென்று காட்டி, அப்பாடலுக்கு உறுப்பாக அமைவன பற்றியும் (மேலே பொதுவென விலக்கினும்) கண்டுச் சுட்டிக் காட்டுகின்றார். காமம் பற்றி வருமேயன்றி அறத் தினும் பொருளினும் வாராதென்பது தெளிவாகிறது இவை இரண்டினையும் உற்று நோக்கும் போது, தொல்காப்பியர் காலத்திய பாடல்கள் நாம் மேலே கண்ட படி வெறும் எலும்புச் சட்டகமெனும் புற உறுப்புக்களா லன்றி, அகத்தில் பொதிந்த பெர்ருள்களின் அடிப்படை யிலேயும் அவ்வவற்றின் தெளிந்த ஓசைகள் அடிப்படை -யிலேயும் அமையப் பெற்றன என்பது தேற்றமாகப் புலப் படுகின்றதன்றோ ! இதன் பெருக்கத்துக்கு நானுாறு அடியும் கீழ் எல்லைக்கு இருபத்தைந்தடியும் என வரையறுப்பர் தொல்காப்பியர் (சூ. 162).

தேவபாணி

ஒசை அடிப்படையில் பாவினைப் பற்றிக் காட்டிய ஆசிரியர் பின் பா வகை நான்கின்ை வேறொரு சூத்திரத் தால் விளக்குகிறார் (சூ. 105). அவ்வாறு விளக்கி அவையும் பொருளின் அடிப்படையில் ன ைத எ ைத. விளக்கும் எனக் காட்டுகின்றார்.

    • அக்கிலை மருங்கின் அறமுதலாகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப”

- (செய்.கு 1061

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/137&oldid=684527" இலிருந்து மீள்விக்கப்பட்டது