பக்கம்:தாய்மை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தாய்மை

என்று அறம், பொருள், இன்பம் மூன்றைப் பற்றியும் இப். பாடல்கள் விளக்கும் எனப் பயன் காட்டுகின்றார். இவ்வாறு முப்பொருள் பற்றித்தான் பாடல்கள் இருக்கும்; எனவே தொல்காப்பியர் காலத்தில் வீட்டின் விளக்கமான கடவுளைப் பாடிப் பரவும் முறை இல்லையோ எனச் சிலர், ஐயுறுவர். ஏன்? கிடையாது என்றே கூடப் பேசுவர். ஆனால். தொல்காப்பியர் அதற்கு இடம் கொடுக்காது தெய்வம் பரவுதலைக் காட்டியே செல்வர். உலக வாழ்விற்கு இன்றியமையா இம்மூன்றையும் ஒன்றாகக் கூறினதோடு இவற்றின் நிலையாமையை உணர்த்தி அதன் வழி நான்காவதாகிய வீட்டினையும் கூறினார் என்பர் நச்சினார்க்கினியர். உலகியற் பொருள் மூன்றனையும் இவையெனக் கூறி அவற்றை விடுமாறுங் கூறவே வீடும் கூறிற்றாம். அது கூறுதற்குரிய செய்யுளும் மேற்கொச்சக மென்று கூறுமாறு உணர்க’ என்பது அவர் விளக்கம்.

கலிப்பாவின் வகைகளைக் கூறிவரும் ஆசிரியர் தொல் காப்பியர் ஒத்தாழிசைக் கலியைக் கூறும்போது,

ஏனை யொன்றே - தேவர்ப் பராய முன்னிலைக் கண்ணே'’

(செய். கு. 1881

எனத் தேவர்களை முன்னிலைப் படுத்திப் பரவுதலைக் காட்டுகின்றார். இம்முன்னிலை பரவும் பாடற் பண்பினைத் திருமுருகாற்றுப்படையிலும் சிலப்பதிகாரத்திலும் நாம் நன்கு தெளியக் காண்கிறோம். அந்த வகையிலேயே தொல்காப்பியர் காலத்திலும் கடவுள் நெறி போற்றி, அத் தெய்வத்தை முன்னிறுத்தி வாழ்த்திப் பரவும் வரம் வேண்டும் சிறந்த மரபு இருந்தது என்பது நன்கு தெளிவா கின்றது. கருப் பொருளில் தெய்வம் பற்றி முதலில் தொல்காப்பியர் குறிப்பதும் (அகத்திணை கு. 20) மெய்ப் பாட்டியலில் தெய்வம் அஞ்சல் பற்றிக் குறிப்பதும் (மெய். சூ. 24) தொல்காப்பியர் தெய்வம் உண்டு என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/138&oldid=684528" இலிருந்து மீள்விக்கப்பட்டது