பக்கம்:தாய்மை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தாய்மை

என்கிறார், இதில் வழிபடுவாரைத் தெய்வம் காப்பாற்றும் நிலையினையும், அதன் காத்தல் வலத்தால் உயிர்கள் பழிதீர் செல்வமும் வழிவழி சிறக்கும் பொலிவினையும் பெறுநிலையினை நமக்குக் காட்டுகின்றார்.

எனவே தொல்காப்பியர் காலத்து ‘வ ழ ங் கி ய இத்தகைய கலிப்பாக்கள் - இசையொடு பொருந்திய வாக்கள், அறம், பொருள், இன்பம் பற்றி மட்டுமன்றி ஆண்டவனைப் படர்க்கையிலும் முன்னிலையிலும் பரவிப் வாடுவதற்குப் பயன்பட்டன என அறிய முடிகின்ற தன்றோ? அப்பாடல்கள் அனைத்தும் கிடைப்பின் பழந்: தமிழ்ப் பாநலன் நன்கு சிறக்கும் என்பது துணிவு. -

பண்ணத்தி

இனி, பண் பற்றியே எழும் பாடலைத் தொல்

காப்பியர் தனியாகப் பண்ணத்தி’ என்றே கூறுவதைக் காணல் நலம் பயப்பதாகும்.

பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டின் இயல பண்ணத் திய்யே’

- (செப். 173): என்பர் அவர். இதற்கு உரை கூற வந்த இளம்பூரணர், பாட்டின் கலந்த பொருளை உடைத்தாகி, பாட்டுக் களின் இயல்பையுடையவாம் பண்ணைத் தோற்று: விக்கும் செய்யுட்கள் என்றவாறு’. “பண்ணைத் தோற்றுவித்தலால் பண்ணத்தி என்றார். அவையாவன சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத்தமிழில் ஒதப்படுவன” .

எனக்காட்டி அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளை அடுத்து வரும் சூத்திரங்களின் வழியே விளக்கிச் செல்கின்றார். பேராசிரியர், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/140&oldid=684531" இலிருந்து மீள்விக்கப்பட்டது