பக்கம்:தாய்மை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகனின் வளர்ச்சி 139

மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சி இல்லாத புற உறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவையாவன : நாடகச் செய்யுளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின என்பர்.

இவ்வாறெல்லாம் நாம் அறிந்து கொள்வது தொல் காப்பியர் காலத்துப் பாடல்கள் நல்ல இலக்கண மரபில் இயற்றமிழ் இலக்கியமெனத் தக்க வகையில் நூல்களாக அமைந்து நின்றவை போக, வேறு இசைத்தமிழ், நாடகத் தமிழ் ஆகியவற்றுள் மரபு கெடாத வகையில் மக்கள் கற்கும் வழி மட்டுமன்றிக் கண்டும் கேட்டும் உணர்ந்து கொள்ளத்தக்க வகையில் பண்ணொடு பொருத்தப் பாடப் பெற்ற பாடல்கள் பலப்பல இருந்தன என்பதேயாம். இத்தகைய பாடல்கள் பெரும்பாலும் புறவழக்காக நல்ல இலக்கிய வளம் அறியாத கல்லா மாக்களிடம் பயின்று வந்தனவோ என எண்ண வேண்டியுள்ளது. எப்படியா யினும் தொல்காப்பியர் காலத்தில் நால்வகைப் பாக்களும் அவற்றொடு பொருந்திய பண் ஒன்றப் பரவும் பாடல்களும் இருந்தன என்பது தேற்றமன்றோ! இத்தகைய பாடல்களுக் கெல்லாம் அடிவரையறைகளையும் வைத்துப் பாவின் அமைப்பினை அறுதியிடுவர் தொல்காப்பியர். அவற்றை விரிப்பிற் பெருகும். தொல்காப்பியர் ‘பா’ நான்கு எனக் கூறினாரேனும், அவற்றை மறுபடியும் எண்ணி இரண்டி னுள்ளேயே அடக்கிவிடுகிறார். அவர், -

பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்

ஆசிரியப்பா வெண்பா வென்றாங்கு ஆயிரு பாவினுள் அடங்கு மென்ப ‘

- (செய். சூ. 107)

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/141&oldid=684532" இலிருந்து மீள்விக்கப்பட்டது