பக்கம்:தாய்மை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தாண்மை

ளார். அவற்றை ஓரளவு கண்ட நாம் இனி அக்காலம் தொடங்கிக் காப்பிய காலம் வரையில் அந்தப் பா’ வளர்ந்த வரலாற்றைக் கண்டு அமைவோம்.

பகுதி 3

சங்கப் பாடல்கள்

தமிழர் தம் பழம் பண்பினையும் வாழ்க்கை முறை களையும் நமக்கு உணர்த்துவன சங்க காலப் பாடல்களே. கடைச் சங்க காலத்தில் பாடப் பெற்றனவாக இன்று நமக்குக் கிடைக்கப் பெறும் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் தெளிவையும் காட்டிக் கொண்டுள்ளன. இவற்றின் கால எல்லையைக் கணித்தறிந்த ஒரு சிலர் இதன் எல்லை கி. மு. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கிக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்பர். ஒரு சில பாடல்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டனவாக அமைதலும் உள என்பர். புறநானூற்று இரண்டாம் பாடலில் சேரமான் பாண்டவர் போரில் சோறு அளித்த செய்தி கூறப்படுகிறது. அதனாலேயே அச் சேரன் பெருஞ் சோற்றுதியன்’ என்ப்பட்டான். அக்காலம் இடைச் சங்க காலம் எனக் கொண்டு இப்பாடலைப் பாடிய முரஞ்சியூர் முடிநாகராயரை இடைச் சங்க காலத்தினைச் சார்ந்தவர் என்பர். அப்படிப் பஃறுளியாற்று மணலிலும் பலவே’ என வாழ்த்து வழங்கும் பாடலும் இடைச் சங்க காலத்துப் பாடல் என்பர். இவ்வாறு ஒரு சில கடைச் சங்க கால முன் எல்லைக்குச் செல்ல, சிறுபாணாற்றுப்படை, மலைபடு கடாம் போன்ற பத்துப் பாட்டுச் செய்யுட்கள் கடைச் சங்க காலத்துப் பின் எல்லைக்கும் பிற்பட்டன என்பர். இவ்வாறு காலத்தால் முன்னும் பின்னும் செல்வன ஒரு சிலவே; எனினும் பெரும்பாலன கடைச் சங்க காலத்து எல்லை -யிலே நிற்பன. இவை அனைத்தையும் காலத்தினால் பிந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/146&oldid=684537" இலிருந்து மீள்விக்கப்பட்டது