பக்கம்:தாய்மை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 145.

புலவர் ஒருவர் தொகுத்து, அடிகளின் அடிப்படையில் எல்லையும் பெயரும் அமைத்து, நூல்களை வகைப்படுத்திக். கடவுள் வாழ்த்து ஒவ்வொரு நூலுக்கும் அமைத்து உலகுக்கு வழங்கினர் என்பர். அவர் பாரதம் பாடிய பெருந் தேவனார் என்பது பலருடைய கொள்கையாகும். எப்படி

யாயினும் இத்தொகை நூல்கள் இரண்டும் நமக்குச் சங்க கால மக்கள் வாழ்வினை வெளிக்காட்டுகின்றன என்பது

தேற்றம். - -

கிலைத்த வாழ்வுப் பாடல்

சங்க காலப் பாடல்களை நோக்கும் போது, அவற்றில் குறுகிய அளவுகளில் அமைந்துள்ள பெருகிய பொருட். செறிவினை நம்மால் உணர முடிகின்றது. ஆயிரக்கணக் கான பாடல்கள் பாடியும் காட்ட வந்த பொருளை முட்ட முடியக் கூறாது இடர்ப்படும் சில பிற்காலப் புலவர்களைப் போலல்லாது, தாம் சொல்ல வந்த பொருளை அக்காலப் புலவர்கள் ஒருசில அடிகளால் தெளிய வைத்திருப்பது: போற்றற்குரியதாகும். இப்பாடல்களுள் ஒருசில தவிர்த்து, பெரும்பாலன அகவல் யாப்பால் அமைந்திருப்பதைக் காணலாம். நாம் முற்பகுதியில் கண்டபடி, அகவிக் கூறிப் பொருளை உணர்த்தும் பாடலாக அகவல் அமைகின்ற். மையின் இப் பாடல்கள் அகவற் பாவாக அமைந்து, அன்று முன்னின்று கேட்ட அரசருக்கும் மற்றவருக்கு மட்டுமன்றி இன்றும் என்றும் வாழும் மக்கட் சமுதாயமே முன்னின்று கேட்டுப்பயன்பெறும் வகையில் அமைந்துள்ளன. புலவர் காலத்தை வென்று நின்று வாழும் சமுதாயத்துக்கு என்றும் நிலைத்த உண்மைகளை விளக்க வேண்டியவர்களே என்ற உண்மையின் அடிப்படையில் அக்காலப் புலவர்கள் தம் யாடல்களைப் பாடியுள்ளார்கள். அதனாலேயே அவை. ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் செம்மை நலம். பெற்று வாழ்கின்றன. - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/147&oldid=684538" இலிருந்து மீள்விக்கப்பட்டது