பக்கம்:தாய்மை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 . தாய்மை

தவிர்த்த கலித்தொகையும் பரிபாடலும் வேறுபாவகை யால் இயங்குவனவாகும். - -

கலித்தொகை

கலித்தொகை ஐந்திணை நிலத்துக்கும் அமைந்த ஒழுகலாற்றின் அ டி ப் படை யி ல் அமைந்துள்ளமை, அறிவோம். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் ஒழுக்க நெறியில் நின்று, கபிலர் போன்ற பேரறிஞர்கள் பாடிய 150 பாடல்களே கலித்தொகையாக அமைந்துள்ளன. அவற்றுள் கலிப்பாவின் பல வகைகளும் இடம் பெற்றமை கா ண் கி ன் றோம். கலிப்பாவின் வளர்ச்சியும் அமைப்பும் காட்டும் சங்க காலத்திய நூல் அது ஒன்றேயாயினும் அந்த அடிப்படையில் நான்கடி யாகிய அளவடிக் கலிப்பாக்கள் பல பிற்காலத்தில் எழுந்துள்ளமை நம்மால் காண முடிகின்றது. எனவே சங்க காலத்தில் ஆசிரியம் போன்று அத்துணைப் பேர ளவில் கலிப்பா வழக்கத்தில் இல்லை என்றாலும் அந்த ஒரு தொகை நூலே அக்காலத்தில் கலிப்பாவின் இன்றி. யமையாத் தன்மையை நமக்கு விளக்குகின்றது.

\ . பரிபாடல்

பரிபாடல் சந்த அமைப்பிலே நமக்குக் கிடைப்பதும், தொகைநூலில் இடம் பெறுவதும் ஆகிய ஒரே பாடல் ஆகும். அதன் தொகை எழுபது எனக் காட்டப்பெற்றும். நமக்குக் கிடைப்பன இருபத்திரண்டே. அவற்றுள்ளும் சில: முற்றும் கிடைக்கா நிலையில் உள்ளன. எ னி னு ம். கிடைக்கும் சிலவற்றிலிருந்து பிற தொகை நூல்களுள் காணப்பெறாத சில உண்மைகளையும் வழக்கியல்பு. க்ளையும் நாம் காண்கின்றோம். ஒவ்வொரு பாடலுக்கும் இசையும் யாழ்த்திறனும் அமைத்துக் காட் ட ப் பெற்றுள்ளமை இதன் தனிச்சிறப்பாகும். சிலவற்றிற்குப் iண் அமைத்திருப்பதும் நோக்கத்தக்கது. எனவே இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/150&oldid=684542" இலிருந்து மீள்விக்கப்பட்டது