பக்கம்:தாய்மை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 149

இசையொடு பொருந்திப் பண் ஒன்றப் பாட்டிசைக்கும் வகையில் அமைந்தவை என்பது தேற்றம். இசை பற்றிக் குறிக்கும்போது நன்னாகனார் இசை, பித்தாமத்தர் இசை என நல்லாசிரியர் பலரொடு பொருத்திக் காட்டுவதை நோக்க, இவற்றிற்கு இசை அமைத்துத் தந்தவர்கள் அப் பெரும் இசைப் புலவர்களோ என எண்ண வேண்டியுள்ளது. முதலில் பாவினைப் பாடிய புலவரைச் சொல்லிப் பின், இன்னார் இசை எனக் காட்டிப் பின், யாழ் அல்லது பண்ணைக் குறித்துள்ளார் ஒன்றிரண்டு காண்போம். 3ஆம் பாடல் இறுதியில், -

கடவுள் வாழ்த்து

கடுவன் இளவெயினனார் பாட்டு

பெட்டனாகனார் இசை

பண்ணுப் பாலையாழ்’ என்ற குறிப்பு உள்ளது. அப்படியே 18ஆம் பாடல் இறுதியில்,

‘கடவுள் வாழ்த்து

குன்றம் பூதனார் பாட்டு

கல்லச்சுதனார் இசை பண் காந்தாரம் என்ற குறிப்பு உள்ளது. இவற்றுள் முதலாக உள்ளது பாடற் பொருளைக் காட்டுவது. பரிபாடல் பாடல்கள் திருமால், செவ்வேள் ஆகிய கடவுளரை வாழ்த்தவும் வைய்ையைப் பாடவும் எழுந்தன. வையையைப் பற்றிய பாடல்களுள் முதல் காணும் பொருள் பற்றிய குறிப்பினைக் காண்கின் றோம். அடுத்தது பாடினோர் பெயராகின்றது. மூன்றா வதாக இசையுடன் சார்த்திய பெயர். இப்பாடலுக்கு இசையமைத்த இசையாசிரியர் பெயர் என்று கொள்ள இடம் உண்டல்லவா? கடைசியாக உள்ளது என்ன பண்ணிலே அப்பாடல் அமைகின்றது என்பதைக் குறிப்ப,

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/151&oldid=684543" இலிருந்து மீள்விக்கப்பட்டது