பக்கம்:தாய்மை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தாய்மை

தாகும். யாழ், பண் இரண்டும் ஒரு பொருள் நீர்மைத்து எனக் கொள்ள வேண்டியுள்ளது. இக் கடைச் சங்க காலத்திய தொகை நூல்களுள் இப்பரிபாடல் தனித்த தன்மையுடையதாய், இசையோடு பொருந்தியதாய்ச் சிறந்து விளங்குவதறிகின்றோம். இவ்வாறு கலிப்பாவும், பரிபாடலும் தவிர்த்த பிற சங்கப் பாடல்கள் எல்லாம் ஆசிரியப்பாவிலேயே இருக்கக் காண முடிகின்றது. பிற் காலத்தில் வெண்பா முதலிடம் பெற்ற போதிலும் தொல் காப்பியர் ஆசிரியத்துக்கே முதலிடம் தந்தமையை முன்னரே கண்டோம். கடைச்சங்க காலத்திய பாடல் களும் அந்த உண்மையினையே நமக்கு உணர்த்துகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் வெண்பாவினைக் காண்ப தரிது என்பதை யாவரும் அறிவர். எனினும் கடைச்சங்க காலத்தினை ஒட்டியனவாகக் கருதப்பெறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல வெண்பா யாப்பில் ஆக்கப் பெற்றமை காண முடிகின்றது. அவை பெரும்பாலும் அகவிக் கூறாது அறம் காட்டும் தன்மையில் அமைகின்ற மையில் தொல்காப்பிய அடிப்படையில் அவை வெண்பா வால் அமைகின்றன எனக் கொள்ளலாம். பத்துப் பாட்டிலும் சிலம்பிலும்கூடச் சில வெண்பாக்கள் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. எனினும் எட்டுத்தொகை யில் ஆசிரியமே ஆட்சி செலுத்துகிறது. இலக்கியத் திருப்பங்கள்

இலக்கிய நெடுந்தெரு நீண்ட ஒன்றாகின்றது. எனவே, அதில் எத்தனையோ திருப்பங்களும் மாற்றங்களும் அமைந் துள்ளன. அவை இலக்கிய நெடுந்தெருவின் போக்கையும் அமைப்பையும் வேறுபாட்டையும் பிறவற்றையும் நமக்குக் காட்டுகின்றன. இந்த உண்மை எல்லா மொழிகளுக்கும் பொருந்துவதாகும். நெடுந்தொலைவில் கால் கொண்டு நீண்டு அமைந்த தமிழ் இலக்கிய நெறிக்கும் இவ்வுண்மை பொருந்துவதாகும். கடைச் சங்க கால நூல்களாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/152&oldid=684544" இலிருந்து மீள்விக்கப்பட்டது