பக்கம்:தாய்மை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 151.

போற்றப்பெறும் எட்டுத்தொகை, ப த் து ப் பாட்டு

இடையே ஒரு திருப்பம் உண்டாயிருக்க வேண்டும் என்பது. தெளிவாகின்றது. பத்துப்பாட்டில் வரும் சில பாட்டுடைத்

தலைவர்கள் எட்டுத்தொகைப் பாடல்களிலும் தலைவர்

களாக உள்ளாரேனும் இருவகைப் பாடல்களுக்கும் வேறு பாடு இருப்பதைக் காண்கிறோம். அப்படியே எட்டுத்

தொகைப் பாடல்களுள் சிலவற்றைப் பாடிய பெரும்.

புலவர்கள் பத்துப் பாட்டிலும் சில பாடியுள்ளனர். எனினும் இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. இந்த இரு வேறு வகைத் தொகுப்புக்களை ஏன் பகுத்தார்கள் என்ப தையே எண்ண வேண்டியுள்ளது. புறத்திலேயோ அன்றி அகத்திலேயோ இப் பத்துப் பாடல்களைச் சேர்த்திருக்கக் கூடாதா? இவற்றின் அமைப்பும் அளவும் பிறநிலை களையும் கருதிப் பத்துப் பாடல்களையும் வேறாகப்

பிரித்தார் எனக் கொள்ள முடிகின்றது.

எட்டுத் தொகை 4 அடி தொடங்கி 100 அடிக்கு உட்பட்ட பாடல்களையே கொண்டுள்ளது. பரிபாடல் ஒரு வேளை அந்த எல்லைக்கு விதிவிலக்காகலாம். பாடல் அமைப்பே வேறுபட்டமை போன்று அடி அளவிலும் அது வேறுபட்டிருப்பதில் வியப்பு இல்லை. ஆனால் பத்துப் பாடல்கள் அமைப்பில் அகத்தைப் போன்றும் புறத்தைப் போன்றும் அமைந்த போதிலும் இவை தனியாகப் பிரிக்கப் பெற்றனவே. அளவில், அடியில் மட்டு மன்றிப் பிறவகை யிலும் இவை பிரிக்கத் தகுதியுடையன, வேறு திருப்பத்தில் செலுத்தப்பெறுகின்றன என அறிதல் வேண்டும்.

முதல் திருப்பம்

எட்டுத்தொகையில் வரும் பாடல்களுள் பற்பல அகத்திணை, புறத்திணை அடிப்படையில் அரசரை முன்னிறுத்தி அவர் வென்றி அல்லது இகல் பற்றியோ வேறு செயல் பற்றியோ சுருக்கிக் கூறி, அவரை வாழ்த்தியோ, அவருக்கு அறிவுறுத்தியோ, அவரை ஆற்றுபடுத்தியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/153&oldid=684545" இலிருந்து மீள்விக்கப்பட்டது