பக்கம்:தாய்மை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 153

களும் பிற பாடல்களும் இடம் பெற்றிருக்கும் எனக் கொள்ளலாம். எப்படியாயினும் எட்டுத்தொகையாகிய சங்கப் பாடல்களினும் வேறு வகையில் வேறு திருப்பத்தில் செல்லும் தன்மையில் அமைகின்றது பத்துப்பாட்டு’ என்பது தேற்றம். -

இப் பத்துப் பாட்டில் வரும் திருமுருகாற்றுப்படையும் எட்டுத் தொகையில் வரும் பரிபாடலும் முருகன், திருமால் பற்றிய பாடல்களும் அக்காலத்திலேயே கடவுளை முன்னிறுத்திப் பாடிப் பரவிப் பயன் பெறும் மரபு இருந்தது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தெய்வம் உண்டு என்று உணர்த்துவத மட்டுமன்றி அத் தெய்வத்தையே முன்னிறுத்திப் போற்றி, அதனிடம் யாம் இரப்பவை இவையிவை என்றும், அத்தெய்வம் தந்த பெறலரும் பரிசில் இது என்றும் காட்டும் வகையில் இப்பாடல்கள் நன்கு அமைகின்றன. எனவே பாடல்களுக் குரிய வளர்ச்சிக்கிடையில் சமுதாய வாழ்வின் நெறியும் வளர்ச்சி பெற்றுவருகின்றன என்க் காண முடிகின்றது. பாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் பல சமுதாயச் .சூழல்களின் வளர்ச்சியையும் நாம் காண முடிகின்றது. விரிப்பின் பெருகும்; மேலே செல்லலாம். இரண்டாங் திருப்பம் - -

பழந்தமிழ்ப் பாட்டின் நெடுவழியில் பத்துப் பாட்டிற்குப் பிறகு மற்றொரு பெருந் திருப்பம் கிடப்பதை நன்கு உணர முடிகின்றது. அத்திருப்பம் நம்மைக் காவிய நெடுந்தெருவுக்கு ஈர்த்துச் செல்கின்றது. இத்தகைய திருப்பங்கள் நம் இலக்கியத்தில் ஏற்படக் காரணம் என்னென்று. சற்றே நின்று நினைப்பின் ஒர் உண்மை புலனாகும். அடுத்து வருகின்ற காப்பியங்களைக் கானும் போது தமிழ் மரபுக்கும் வாழ்வுக்கும் மாறுபட்ட பல. செயல்களைக் காண்கின்றோம். இவையெல்லாம் அக்கால எல்லையில் தமிழ்நாட்டில் மற்றவரும் மர்ற்றவரும் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/155&oldid=684547" இலிருந்து மீள்விக்கப்பட்டது