பக்கம்:தாய்மை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தாய்மை

புகுந்து வாழ்வொடு இலக்கிய நெறியினையும் பாட்டுச் செலவினையும் மாற்றிவிட்டார்கள் என எண்ண வேண்டியுள்ளது. எனவே பழந்தமிழ்ப் பாவின் அடிப் படையில் கடைச் சங்க காலத்தினை ஒட்டியும் அதை அடுத்தும் பல மாற்றங்கள் உண்டாயின எனக் காண முடிகின்றது.

பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும்

இலமே’ என்ற அடிப்படை மாறிச் சிறிது உள்ளதைக் காட்டிய காலம் மாறிச் சிறிது உள்ளதும் பெரிதும் புனைவுமாகிய காலம் வந்த காரணத்தால் காப்பியங்கள் தமிழ்நாட்டில் தோன்ற ஆரம்பித்தன. எனினும் அந்தப் பெருமாற்றத்தை யாரும் எளிமையாகச் செய்ய விரும்ப வில்லை என்பது தெளிவாகின்றது. இத்திருப்பத்தில் யார் முதலில் அடி எடுத்து வைப்பது என்ற வினா எழுகின்றது. யாரும் முன்வராதபோது, நெடிது நினைந்து, இருவர் இணைந்தே செல்வதாக முடிவு செய்தனர். அந்த நிலையில் தோன்றியனவே இரட்டைக் காப்பியங்கள். பாடிய புலவர் இருவரும் பெரியவர்கள். ஒருவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்; மற்றவரோ கடைச்சங்கத்தில் இருந்தவராகக் கருதப்பெறும் பெரும் புலவராவர். எனினும் காப்பியத்தை எழுதுவது யார் என்ற பேச்சில் இருவருமே. தயங்கினர்.

  • முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது.

அடிகள் நீரே யருளுக

என்று சாத்தனார் இறுதியில் காரணங்காட்டிக் கூற, முதலில் மயங்கிய இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்ற இணங்கினார்; ஆயினும் அக் காப்பியத்தோடு இ ைண ந் தே சாத்தனார் மணிமேகலையைப் பாட வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் கூ ட .ே வ: சேர்த்தார். அதனாலேயே *மணிமேகலை மேல் உரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/156&oldid=684548" இலிருந்து மீள்விக்கப்பட்டது