பக்கம்:தாய்மை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தாய்மை

தமிழர் பாநல எல்லையை இந்த அளவோடு நிறுத்திக் கொள்ள எண்ணுகிறேன்.

முடிக்குமுன் பதினெண்கீழ்க்கணக்கினைப் பற்றியும் கானல் வேண்டும். பத்துப்பாட்டும் பெருங்காப்பியங்களும் இவ்வாறு ஒருபக்கம் வளர்ந்துகொண்டு வருந்த அதே வேளையில் நீதி பற்றிய நூல்களும் வளரலாயின. அவை பொய்யும் வழுவும் தோன்றிய பின் புகுந்தனவா அன்றி நாட்டு இயல்பான அறநெறியினைப் பற்றி அமைந்தனவா என்ற ஆய்வு நமக்குத் தேவை இல்லை. ஆனால் தொல் காப்பியத்தில் வெண்பாவிற்கமைந்த மரபு நெறி வழாமல் இந்த நீதி நூல்கள் அமைந்துள்ளன. அகம் பற்றிய ஒருசில நூல்கள் தவிர்த்துப் பெரும்பாலான அறம் உணர்த்துவன வாகவே உள்ளமை அறியலாம். அவை யாரையும் முன்னிலைப் படுத்தாது, வெண்பா அகவுதலில்லாத ஓசை உடைத்து’ என்ற வகையில் அமைந்து, அறத்தை மன்பதைக்கு வற்புறுத்தும் வகையில் அமைந்து செல்வன வல்லவோ! குறளும், நாலடியும், பழமொழியும் பிறவுமாகிய அறநூல்கள் அத்தனையும் .ெ வ ண் பா யாப்பினால் ஆகியவையல்லவா? இவை காட்டும் அறநெறிகள் நம் நாட்டுக்கு மட்டுமன்றித் தமிழ்ச் சமுதாயத்துக்கு மட்டு மன்றி உலக சமுதாயத்துக்கே அமைந்தனவாக உள்ளவை யினாற்றான் பாரதியார்,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

என்று எக்காளமிட்டுப் பாட முடிந்தது. ஆம்! பாரதி யாரும் அவர் காலத்தும் அவரை ஒட்டியும் வாழ்கின்ற நாமும் நம் மரபினை எ ண் ணி ப் பெருமைபடக் காரணமாக-அடிப்படை மரபின் சிறப்பினைக் கொண்ட தாக அமையும் பழந்தமிழ்ப் பாநலனை"த் திட்டமாக அறுதியிட்டு விளக்க முடியாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/160&oldid=684553" இலிருந்து மீள்விக்கப்பட்டது