பக்கம்:தாய்மை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 1.59%

)

நான் இது வரையில் கூறியவை அனைத்தும் அப். பா நலன் பற்றியே என்றாலும் நான் அது பற்றி முற்றக் கூறு விட்டேன் என்றோ, முடிந்த முடியாகக் கூறிவிட்டேன் என்றோ சொல்ல முடியாது. இலக்கண மரபினை எண்ணி” எண்ணிக் காலங் கழித்த பல புலவர் தமிழ் நாட்டில் வாழ்ந்துள்ளனர்: இன்றும் ஒரு சிலராவது வாழ்கின்றனர். அவர்களெல்லாம் காட்டாத வற்றை நான் காட்டி விட்டேன் என்று கூற இயலாது. எனினும் நான் முதலிலே கூறியபடி என்னுாழ் நிலையும் மனநிலையும் அமைந்த வகை யில் ஒரளவு பழந்தமிழ்ப்பா நலனைக்காட்டமுனைந்தேன். இவற்றை மேலும் ஆய்ந்து நல்லன கொண்டு அல்லன. அகற்றல் உங்கள் கடன் என வேண்டி அமைகின்றேன். வாழ்க பழந்தமிழ்ப் பாநலன்! வளர்க அதன் மரபும் செம்மையும்! - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/161&oldid=684554" இலிருந்து மீள்விக்கப்பட்டது