பக்கம்:தாய்மை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தொல்காப்பியர் காட்டும்

மரபு நெறி

தொல்காப்பியம் தமிழ் இலக்கிய, இலக்கண மரபு நெறியில் தொன்மை வாய்ந்தது. அதனை இலக்கணமாக -மட்டும் அளவிடாது, இலக்கியமாகவும் பிற இலக்கியங் களை விளக்கும் ஒளியாகவும் கொள்கின்றனர். எந்த ம்ொழியிலும் இல் லா த வகையில் எழுத்துக்கும் சொல்லுக்கும் ம ட் டு ம் இ லக் க ண ம் காட்டாது பொருளுக்கும் காட்டும் ஒரு பெருஞ்சிறப்புத் தொல் காப்பியத்துக்கு உண்டு. எனவே தொல்காப்பியத்தில் மக்கள் வாழ்வொடு பிணைந்த சமுதாய இயல் அனைத்துமே விளக்கப் பெறுகின்றது. தொல்காப்பியத்தில் அது எழுந்த காலத்தில் வாழ்ந்த சமுதாயத்துக்கு மட்டு மன்றி வழிவழியாக வரும் மக்கள் சமுதாயத்திற்கே பொருந்திய வகையில் அதன் ஆசிரியர் பல இயல்புகளையும் நெறிகளையும் சுட்டிக் காட்டுகின்றார். அப்படிக் காட்டும் முகத்தான் அவர் கொண்ட மரபு நிலையும் அதன்வழி அமையும் சமுதாயு அமைப்பும் நமக்கு நன்கு விளங்கு கின்றன.

எழுத்தின் இயல்பிலும் சொல்லின் அமைப்பிலும் பொருளின் தன்மையிலும் உள்ள மரபுகள் எவ்வெவ்வாறு போற்றிக் காக்கப் பெற வேண்டும் என்பதைத் தொல் காப்பியர் ஆங்காங்கே சுட்டிக் காட்டத் தவறவில்லை. தொல்காப்பியர் காட்டும் மரபு நெறியிலிருந்து மக்கள் பிறழும் போதுதான் நாட்டிலும் உலகிலும் கொடுமை களும் கொந்தளிப்பும் உண்டாகின்றன என்பதை இன்றும் . காணலாம். எனவே தொல்காப்பியர் என்றென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/162&oldid=684555" இலிருந்து மீள்விக்கப்பட்டது