பக்கம்:தாய்மை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி 161

வாழும் மக்கள் சமுதாயத்துக்கென, அவர்தம் மொழி,

வாழ்க்கை, அமைப்பு நெறி முதலியவற்றின் மரபுகளை யெல்லாம் நெறிப் படுத்திக் காட்டுவதை உணர்ந்து வாழின்

தமிழ்ச் சமுதாயம் மட்டுமன்றிந் தரணியே நலம் பெறும். அந்த மரபுநெறி போற்றா வகையில் மாற்றங்கள்

தோன்றும். இவை பற்றித் தொடர்ந்து அவர் காட்டும். மரபுநெறி பற்றி விளக்கிக் காணும் போது காணலாம். எனக் கருதுகிறேன். .

இனி மர்பு என்பது என்ன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அத்துடன் அம்மரபைக் க்ட்டிக் காக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையும் ஆய்ந்து தெளிதல் வேண்டும். மரபு என்றால் என்ன? தொல் காப்பியர் மரபியல்’ என்றே ஒரியலைத் தம் நூலின் கடைசியில் அமைத்துள்ளார். தாம் கூற வேண்டிய எழுத்து, சொல், பொருள் இவற்றின் இலக்கணங்களை யெல்லாம் நன்கு காட்டி, இறுதியாக இம் மரபியலை அமைத்துள்ள நிலை அவை மூன்றும் எந்த வகையில் மரபொடு பொருந்தி வாழ வேண்டும் என்பதை விளக்குவது. போன்று அமைகின்றது. மேலும் நூலில் மரபு’ என்ற. சொல்லை வேறு இடங்களிலும் வழங்குகிறார். அவருடைய அசற் பகுதிகளுள் சில நூல் மரபு”, மொழி D5I’, தொகை மரபு, விளி மரபு எனவே வழங்கப்பெறு கின்றன. நடைமிகுந் தேத்திய குடை நிழல் மரபும்’ (பொருள் 91) என்பது ஒரிடம். இதற்கு இலக்கணம்’ (Charectestics ) எ ன் பது பொருள். மேலும் இறைமை, சான்றோர் சொல்வழக்கு முறை, வமிசம், பாரம்பரியம், நல்லொழுக்கம், பெருமை, மேம்பாடு, வழி பாடு, பருவம் போன்ற பலவகையில் இம் மரபு’ என்னும் சொல் தமிழில் எடுத்தாளப் பெறுவதை அகராதிகள் காட்டுகின்றன. தொல்காப்பியர்தம் மரபுநெறி’ இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. எப்பொருள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/163&oldid=684556" இலிருந்து மீள்விக்கப்பட்டது