பக்கம்:தாய்மை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தாய்மை

எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு என்று சொல்லமைதி அடிப்படையில் மரபு காட்டப்படுவதை இலக்கண நெறியில் அறிகிறோம். ஆனால் தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி, அந்த அளவோடு அமைந்து விடவில்லை. அவர்தம் மரபு எழுத்தில் தொடங்கி வாழ்வொடு பொருந்திய எல்லாப் பொருள்களோடும் ஒன்றியதாக அமைகின்றது. -

மொழியிடையே தொல்காப்பியர் கட்டிக் காத்த --மரபுநெறி தான் இன்று தமிழ்மொழியைக் காக்கின்றது. திராவிட மொழிக் குடும்பத்துள் பிற மொழிகள் அனைத்தும் தம் பண்டைய நிலை மாறி ஆரிய மொழி களோ என ஐயுறும்படி, வேற்று மொழிகளின் கலப்பினால் நிலைகெட்டு, அமைப்பு மாறி, பிறமொழிச் சொற்களைத் தமவே போல அமைத்து முற்றும் மாறுபட்ட நிலையிலும், தமிழ், அக்கலவை மொழிகளைப் போலன்றித் தன் தனித் தன்மையினைக் கட்டிக் காத்து, எத்தனையோ மாறுபாடு களுக்கு இடையேயும் இன்றளவும் தன்மை கெடாது வாழ்வதற்கு அடிப்படைக் காரணம் தொல்காப்பியர் காட்டும் தமிழ் மொழிமரபு நெறியே யாகும். அப்படியே எத்தனையோ மாறுபாடுகளுக்கு இடையிலும் தமிழ்ச் சமுதாயம் ஒரளவு நிலைகெடாமல் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் தொல்காப்பியர் வரையறுத்த வாழ்வியல் மரபு நெறியேயாம். இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்ச் சமுதாயம் ஒரளவு மாறுபட்டு எங்கோ செல்வதாகத் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் தமிழர் தொல்காப்பியர் காட்டிய மரபுநெறியை மறந்தமையேயாம் என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். • -

எனவே, மேலே சொல்லியபடி அந்தத் தொன்மை மரபினை-இலக்கண நெறியை-வாழ்வியல் பாரம் பரியத்தை-ஒழுகலாற்றினை நன்கு உணர்ந்து வாழின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/164&oldid=684557" இலிருந்து மீள்விக்கப்பட்டது