பக்கம்:தாய்மை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி 16s

தமிழ்ச் சமுதாயமும்-பொதுவாக மனித சமுதாயமும் முன்னேற வழியுண்டு. எழுத்தமைப்பிலே-சொல் முறை பிலே-வாழ்வு அடிப்படையிலே எவ்வெவ்வாறு மரபு நெறியினைத் தொல்காப்பியர் விளக்குகின்றார் என்பதை ஒர்ந்து ஆராயின் உண்மை விளங்கும். நான் இங்கு ஒரளவு அவற்றைத் தங்கள் முன் வைக்க நினைக்கின்றேன்.

மொழியின் எழுத்திலக்கணம் சொல்ல வந்த தொல்காப்பியர் தொன்மையான மரபு நெறியில் அவ்வெழுத்துக்களை உயிர், மெய் என்ற இரண்டு பெயரிலே கூறு கி ன் றார். தமிழ் வாழ்வனைத்தும் இவ்விரண்டின் ஆக்கத்தால்-இணைப்பினால் உண்டான தன்மையினை நன்கு உணர்ந்தவராதலின், தம் வாழ்வின் உயிர்நாடியான மொழிகளின் அடிப்படை எழுத்துக்களை -யும் உயிர், மெய் எனவே அழைத்தனர். அவற்றை விளக்கும் தம் எழுத்ததிகாரத்தில் தொல்காப்பியர் மூன்று இயல்களை மரபுவழி நின்று காட்டுகிறார். நூன்மரபு”, மொழி மரபு, தொகை மரபு என்ற பெயர்களாலேயே அவை நன்கு பகுத்துக் காட்டப் பெறுகின்றன. - எழுத்தின் இல்க்கணத்தினையும் மரபு நெறியினையும் விளக்கும் இயலுக்கு நூன்மரபு என்றே பெயர் அமை தலைக் காண்கின்றோம். இத்தலைப்பினைப் பற்றி உரையாசிரியர்கள் வேறுபட்ட கருத்துக்களை விளக்க முற்படினும் மொழிகளுக்கே அடிப்படையான நூல்களுக்கு இன்றியமையாத எழுத்தின் ஒலி, வரி வடிவங்களுக்கு மரபு கூறுதலின் இப் பெயர் பொருந்துவதை உணர்தல் அறிவுடைமையாகும். எழுத்துக்களை எண்ணி வகைப் படுத்தி, அவற்றின் ஒலி அளவுகளையும் அவற்றின் எல்லை யினையும் எல்லை கடக்கும் நிலைகளையும் வரையறை யிட்டு, வரிவடிவ நிலையினையும் மரபினையும் குறியீடுகள் காட்டி விளக்கி, அவை தம்முள் இணைந்து சொல்லாகும், நெறியினையும் சுட்டி நூல்மரபினை முடித்து, அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/165&oldid=684558" இலிருந்து மீள்விக்கப்பட்டது